ஜீ தமிழில் இருந்து விஜய் டிவிக்கு வரும் சூப்பர்ஹிட் சீரியல் நடிகை.. யார் தெரியுமா
கார்த்திகை தீபம்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் கார்த்திகை தீபம். TRP ரேட்டிங்கில் டாப்பில் இருந்த இந்த சீரியலின் கதைக்களத்தை தற்போது முழுவதுமாக மாற்றியுள்ளனர்.

இனி கார்த்திகை தீபம் சீரியல் கிராமத்து கதைக்களத்தில் ஒளிபரப்பாகவுள்ளது. இந்த நிலையில், கார்த்திகை தீபம் சீரியலில் தீபா எனும் கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் நடிகை அர்த்திகா. இவரை கார்த்திகை தீபம் சீரியலில் இருந்து திடீரென நீக்கிவிட்டனர். இதற்கான காரணத்தை அவரே கூறியிருந்தார்.
இப்படியொரு திட்டத்தால் தான் கார்த்திகை தீபம் தொடரில் இருந்து என்னை வெளியேற்றிவிட்டனர்.. அர்த்திகா அதிர்ச்சி தகவல்
புதிய சீரியல்
இவர் தற்போது ஜீ தமிழில் இருந்து விஜய் டிவிக்கு வரப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கார்த்திகை தீபம் சீரியலில் கதாநாயகியாக நடித்து வந்த நடிகை அர்த்திகா, இனி விஜய் டிவியில் வரவுள்ள புதிய சீரியலில் கதாநாயகியாக நடிக்க கமிட்டாகியுள்ளார் என கூறுகின்றனர்.

விரைவில் இந்த புதிய சீரியல் விஜய் டிவியில் வரவுள்ளது என்றும் அதுகுறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
பிரான்ஸ் அருங்காட்சியக திருட்டில் பயன்படுத்தப்பட்ட கிரேன்., விளம்பரம் செய்த ஜேர்மன் நிறுவனம் News Lankasri
தீவிரமடையும் போர்... உலகின் மிகப்பெரிய விமானம் தாங்கி கப்பலை கரீபியனுக்கு அனுப்பிய ட்ரம்ப் News Lankasri