புதிய மைல்கல்லை எட்டிய ஜீ தமிழின் கார்த்திகை தீபம் சீரியல்... வாழ்த்தும் ரசிகர்கள்
கார்த்திகை தீபம்
ஜீ தமிழில் 1000 எபிசோடுகளுக்கு மேல் ஒளிபரப்பாகிய தொடர்களில் ஒன்று செம்பருத்தி.
கார்த்திக்-ஷபானா முதன்முறையாக ஜோடியாக நடிக்க இவர்களுக்கு என்றே தனி ரசிகர்கள் வட்டாரம் உருவாகியிருந்தது. தொடர் முடிய கார்த்திக் அதே வேகத்தில் ஜீ தமிழில் கார்த்திகை தீபம் என்ற சீரியலில் நாயகனாக நடிக்க தொடங்கினார்.
கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கிய இந்த சீரியலில் அர்த்திகா நாயகியாக நடித்து வந்தார். தொடர் வெற்றிகரமாக ஓடினாலும் திடீரென அந்த பாகத்தை முடித்தார்கள்.
ஸ்பெஷல் டே
பின் அதே வேகத்தில் கார்த்திக் தவிர மற்ற புதிய கலைஞர்களுடன் கார்த்திகை தீபம் தொடரின் 2வது சீசன் தொடங்கியது.
2வது சீசனின் கதையும் விறுவிறுப்பின் உச்சமாக ஒளிபரப்பாக ரசிகர்கள் பெரிய ஆதரவு கொடுத்து வருகிறார்கள். தற்போது விஷயம் என்னவென்றால் கார்த்திகை தீபம் சீரியல் 1000வது எபிசோடை எட்டிவிட்டதாம்.
இந்த விஷயம் தெரிந்ததும் ரசிகர்கள் சீரியல் குழுவிற்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.