செம கொண்டாட்டத்தில் கார்த்திகை தீபம் சீரியல் குழுவினர்... என்ன விஷயம் தெரியுமா
கார்த்திகை தீபம்
தமிழ் சின்னத்திரையில் சன் மற்றும் விஜய் டிவியை தாண்டி இன்னொரு தொலைக்காட்சியின் தொடரை ரசிகர்கள் பார்க்கிறார்கள் என்றால் அது ஜீ தமிழ் தொடர்கள் தான்.
இந்த தொடர் கார்த்திக் ராஜ் மற்றும் அர்த்திகாவின் கதாபாத்திரத்தை மையப்படுத்தி ஒளிபரப்பாகி வருகிறது.
கடந்த 2022ம் ஆண்டு ஜீ தமிழில் தொடங்கப்பட்ட இந்த தொடருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. அடுத்தடுத்தும் விறுவிறுப்பான கதைக்களம் அமைய தொடர் நாளுக்கு நாள் அதிக வரவேற்பு பெறுகிறது.
எனக்கு பயந்து வருது, கண்ணீரோடு எதிர்நீச்சல் சீரியல் நந்தினி வெளியிட்ட வீடியோ- ரசிகர்கள் சோகமான கமெண்ட்
சூப்பர் தகவல்
அண்மையில் ஜீ தமிழில் நடந்த விருது விழாவில் கூட கார்த்திகை தீபம் தொடருக்காக கார்த்திக் ராஜ் சிறந்த நாயகன் விருது எல்லாம் பெற்றார்.
தற்போது தொடர் குறித்து என்ன ஸ்பெஷல் தகவல் என்றால் கார்த்திகை தீபம் 500 எபிசோடுகளை எட்டிவிட்டதாம்.
இதனால் சீரியல் ரசிகர்கள் வழக்கம் போல் நிறைய எடிட் செய்யப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிட்டு சீரியல் குழுவினருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள். இந்த தொடர் குழுவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.