சவால் விட்ட கார்த்திக்.. ரேவதிக்கு பாட்டி சொன்ன அறிவுரை - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

By Karthick Raja Aug 22, 2026 11:30 AM GMT
Report

தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். நேற்றைய எபிசோடில் சாமுண்டீஸ்வரி பஞ்சாயத்தில் எதிர்பாராத அதிர்ச்சியை சந்தித்த நிலையில், இன்று நடைபெறவுள்ள பரபரப்பான சம்பவங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க உள்ளன.

ரேவதியின் வேண்டுகோளை ஏற்ற பஞ்சாயத்து, கார்த்திக் மற்றும் ரேவதியை காசு வெட்டி பிரித்தது செல்லாது என்று தீர்ப்பளிக்கிறது. இதனால் சாமுண்டீஸ்வரி கடும் கோபத்தில் ஆழ்கிறாள்.

சவால் விட்ட கார்த்திக்.. ரேவதிக்கு பாட்டி சொன்ன அறிவுரை - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட் | Karthigai Deepam Serial Today Episode

இதனைத் தொடர்ந்து சாமுண்டீஸ்வரியை சந்திக்கும் கார்த்திக், "ரேவதியை யாரும் கட்டாயப்படுத்தவில்லை. அவள் விருப்பப்பட்டுத்தான் என்னுடன் வந்திருக்கிறாள். அது உங்களுக்கும் தெரியும். என்னையும் ரேவதியையும் யாராலும் பிரிக்க முடியாது" என்று உறுதியாக சவால் விடுக்கிறான்.

மறுபக்கம், அம்மா என்ன பேசினார் என்று ரேவதி கார்த்திக்கிடம் கேட்கிறாள். ஆனால் நடந்ததை முழுமையாக கூறாமல் கார்த்திக் சற்று மாற்றிச் சொல்கிறான். இருந்தாலும், அம்மா என்ன பேசியிருப்பார் என்பதை ரேவதி புரிந்துகொண்டு மனதிற்குள் வருத்தப்படுகிறாள்.

அடுத்ததாக சாமுண்டீஸ்வரி வீட்டிற்கு திரும்ப, வீட்டில் உள்ள அனைவரும் பஞ்சாயத்து முடிவை தெரிந்துகொள்ள ஆவலுடன் காத்திருக்கின்றனர். பஞ்சாயத்தில் நடந்த விஷயங்களை சாமுண்டீஸ்வரி கூறியபோது, ராஜராஜன் ரேவதிக்கு ஆதரவாக பேசுகிறார். இதனால் ஏற்கனவே கோபத்தில் இருக்கும் சாமுண்டீஸ்வரி மேலும் எரிச்சலடைகிறாள்.

சவால் விட்ட கார்த்திக்.. ரேவதிக்கு பாட்டி சொன்ன அறிவுரை - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட் | Karthigai Deepam Serial Today Episode

இந்நிலையில், ரேவதி பரமேஸ்வரி பாட்டியிடம் நடந்த அனைத்தையும் கூறி மனக்குமுறலை வெளிப்படுத்துகிறாள். அதைக் கேட்டு வருத்தப்படும் பரமேஸ்வரி, "உன் அம்மா ஏன் இப்படி செய்கிறார் என்று தெரியவில்லை" என கூறுகிறார். மேலும், ஒரு கோவிலுக்கு சென்று விளக்கு ஏற்றினால் உன்னையும் கார்த்திக்கையும் யாராலும் பிரிக்க முடியாது என்று நம்பிக்கையூட்டும் அறிவுரையையும் வழங்குகிறார்.

இப்படி பல திருப்பங்களுடன் நகரும் கார்த்திகை தீபம் சீரியலில் அடுத்ததாக என்ன நடக்கப்போகிறது என்பதை தெரிந்துகொள்ள, இன்று இரவு 9 மணிக்கு Zee தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எபிசோடை தவறாமல் காணுங்கள்.  

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US