கடத்தப்படும் சந்திரகலா.. கார்த்திக்கின் மாஸ்டர் பிளானால் கைதாகும் சிவனாண்டி - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் கார்த்திக் விடுதலையாகி வெளியே வந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, கார்த்திக் விடுதலையாக வெளியே வந்ததும் சந்திரகலாவை கடத்த திட்டமிடுகிறான். சுவாதி தனது காதலனை சென்று சந்திக்க இதை சந்திரகலா, சிவனாண்டி கவனிக்கின்றனர். சிவாதியின் காதலனை கடத்தை அவனது முக ஜாடைக்கு மகேஷை மாற்றி சந்திரகலா வீட்டுக்குள் அழைத்து வர திட்டமிடுகின்றனர்.
அடுத்து கார்த்திக் திட்டமிட்டபடி ஆட்களை வைத்து சந்திரகலாவை கடத்தும் கார்த்திக் அதே ஆட்களை வைத்து சிவனாண்டிக்கு போன் செய்து நீங்க சொன்னா மாதிரியே சந்திரகலாவை கடத்தியதாக சொல்ல வைக்கிறான்.

இதனால் சந்திரகலாவை கடத்தியது சிவனாண்டி தான் என நினைக்கும் சாமுண்டீஸ்வரி போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளைன்ட் கொடுக்க சிவனாண்டியை கைது செய்கின்றனர். மறுபக்கம் கார்த்திக் சந்திர கலாவிடம் நீ இந்த கும்பாபிஷேகத்தில் தலையிடக்கூடாது, எந்த பிரச்சினையும் செய்யக்கூடாது அப்படியானால் உன்னை விட்டு வருவதாக மிரட்ட சுந்தரகலா முடியாது என மறுக்கிறாள்.
இந்த சமயத்தில் வீடியோ காலில் கான்ஸ்டபிள் சிவனாண்டியை போட்டு அடிப்பதை கார்த்திக் காட்ட அதை பார்த்து சந்திரகலா அதிர்ச்சி அடைகிறாள்.

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.