கார்த்திக்கை அடைய ரம்யா போடும் சதி திட்டம்- பலியான தீபா, கார்த்திகை தீபம் அதிரடி புரொமோ
கார்த்திகை தீபம்
தமிழ் சின்னத்திரையில் சன்-விஜய் சீரியல்களுக்கு மக்கள் கொடுக்கும் ஆதரவு பெரிய அளவில் உள்ளது. அந்த இரண்டு டிவி தொடர்களை தாண்டி ஜீ தமிழ் தொடர்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் மவுசு கூடி வருகிறது.
அண்ணா, கார்த்திகை தீபம் போன்ற தொடர்களுக்கு எல்லாம் மக்களிடம் நல்ல ரீச் தான். ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியல் மூலம் மக்களை கவர்ந்த கார்த்திக் ராஜ் இப்போது கார்த்திகை தீபம் தொடர் நடிக்கிறார்.
அவருக்காகவே இந்த தொடரை பார்ப்பவர்கள் பலர் உள்ளார்கள்.
இன்றைய புரொமோ
இன்றைய எபிசோடில் கார்த்திகை அடைய ரம்யா, தீபாவிற்கு ஜுஸில் ஏதோ மாத்திரை கலந்துகொடுக்கிறார். அதனை குடித்த தீபா தனது நினைவை இழந்து என்னென்னவோ செய்கிறார்.
விஷயம் அறிந்த கார்த்திக் என்ன ஆனது என கேட்க அதற்கு தீபா ஜுஸ் குடித்த விஷயத்தை கூறுகிறார். அந்த ஜுஸ் டம்பரை கார்த்திக் செக் செய்கிறார். இன்றைய எபிசோடின் இந்த புரொமோவை பாருங்க,