கார்த்திகை தீபம்: சாமுண்டீஸ்வரியின் உயிரைக் காப்பாற்ற கார்த்திக் எடுக்கும் அதிரடி முயற்சி!

By Karthick Raja Oct 31, 2026 04:22 AM GMT
Report

Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ‘கார்த்திகை தீபம்’ தொடரில், அடுத்தடுத்து பல பரபரப்பான திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. சாமுண்டீஸ்வரியின் உயிரைக் காப்பாற்ற கார்த்திக் போராடி வரும் நிலையில், அவரைத் தடுக்க சந்திரகலா போடும் சதிகள் கதையை இன்னும் விறுவிறுப்பாக்கியுள்ளன.

இதயத்துடன் மருத்துவமனைக்கு விரையும் கார்த்திக்!

அருணின் உடல் உறுப்புகளைத் தானமாகக் கொடுக்க முடிவு செய்ததைத் தொடர்ந்து, அவருடைய இதயத்தைச் சாமுண்டீஸ்வரிக்குப் பொருத்தி அவரது உயிரைக் காப்பாற்ற கார்த்திக் கிளம்புகிறார். இதயத்தைச் சரியான நேரத்தில் மருத்துவமனைக்குக் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதால், ஆம்புலன்ஸில் பதற்றத்துடன் பயணிக்கிறார்.

கார்த்திகை தீபம்: சாமுண்டீஸ்வரியின் உயிரைக் காப்பாற்ற கார்த்திக் எடுக்கும் அதிரடி முயற்சி! | Karthigai Deepam Today Episode 31 10 2026

ஆம்புலன்ஸ் டிரைவருக்கு மிரட்டல் விடுக்கும் மது!

இதற்கிடையில், இந்த விஷயம் சந்திரகலாவுக்குத் தெரிய வருகிறது. உடனே தன்னுடைய ஆளான மதுவை வைத்து, ஆம்புலன்ஸ் டிரைவர் ரமேஷுக்குப் போன் செய்து மிரட்டுகிறார்.

“எந்தக் காரணத்தைக் கொண்டும் ஆம்புலன்ஸ் சரியான நேரத்துக்கு மருத்துவமனைக்குப் போய்ச் சேரக் கூடாது. ஏதாவது காரணத்தைச் சொல்லி வண்டியைத் தாமதப்படுத்து. இல்லையென்றால் உன் குடும்பத்தையே கொன்றுவிடுவேன்” என்று மது எச்சரிக்கிறான்.

கார்த்திகை தீபம்: சாமுண்டீஸ்வரியின் உயிரைக் காப்பாற்ற கார்த்திக் எடுக்கும் அதிரடி முயற்சி! | Karthigai Deepam Today Episode 31 10 2026

இதைக் கேட்டு பயந்துபோகும் ரமேஷ், கார்த்திக்கை எப்படியாவது தாமதப்படுத்த வேண்டும் என்று திட்டம் போடுகிறான்.

கோயிலில் பிரார்த்தனை; மருத்துவமனையில் பரபரப்பு!

மறுபக்கம், சாமுண்டீஸ்வரியின் இதய அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிய வேண்டும் என்பதற்காக ரேவதி, ரோகிணி, பரமேஸ்வரி, சுவாதி ஆகியோர் கோயிலில் விளக்குப் பூஜை செய்து மனமுருகிப் பிரார்த்தனை செய்கின்றனர்.

கார்த்திகை தீபம்: சாமுண்டீஸ்வரியின் உயிரைக் காப்பாற்ற கார்த்திக் எடுக்கும் அதிரடி முயற்சி! | Karthigai Deepam Today Episode 31 10 2026

அதே நேரத்தில், மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அறைக்கு வெளியே ராஜராஜன் உள்ளிட்ட குடும்பத்தினர் கார்த்திக்கின் வருகைக்காகப் பதற்றத்துடன் காத்திருக்கின்றனர்.

ஆம்புலன்ஸை நடுவழியில் நிறுத்திவிட்டு தப்பியோடும் டிரைவர்!

தன்னுடைய திட்டப்படி, ஆம்புலன்ஸில் ஏதோ பழுது ஏற்பட்டுவிட்டதாகச் சொல்லி ரமேஷ் வண்டியை நிறுத்துகிறான். இதனால் சந்தேகமடையும் கார்த்திக், “வேறு ஆம்புலன்ஸை ஏற்பாடு செய்யலாமா?” என்று கேட்கிறார்.

ஆனால், “இன்னும் இரண்டு நிமிஷத்தில் சரி செய்துவிடலாம்” என்று சொல்லி ரமேஷ் சமாளிக்கிறான். இதற்கிடையில், கார்த்திக் தன் மீது சந்தேகப்படுவதைப் பற்றி சந்திரகலாவிடம் தெரிவித்து, இனி என்ன செய்வது என்று கேட்கிறான்.

கார்த்திகை தீபம்: சாமுண்டீஸ்வரியின் உயிரைக் காப்பாற்ற கார்த்திக் எடுக்கும் அதிரடி முயற்சி! | Karthigai Deepam Today Episode 31 10 2026

அதற்கு சந்திரகலா, “யாரும் இல்லாத ஒரு இடத்துக்கு வண்டியைக் கொண்டு போய் நிறுத்திவிட்டு, அங்கிருந்து தப்பிச்சிடு” என்று ஐடியா கொடுக்கிறாள்.

அவள் சொன்னபடியே, ஆள் நடமாட்டமே இல்லாத ஒதுக்குப்புறமான இடத்துக்கு ஆம்புலன்ஸைக் கொண்டு செல்லும் ரமேஷ், திடீரென வண்டியை நிறுத்திவிட்டு சாவியையும் எடுத்துக்கொண்டு அங்கிருந்து ஓடிவிடுகிறான்.

சாவி இல்லாமலேயே ஆம்புலன்ஸை ஸ்டார்ட் செய்யும் கார்த்திக்!

டிரைவர் ஓடுவதைப் பார்த்த கார்த்திக், இதற்குப் பின்னால் ஏதோ சதி இருப்பதைப் புரிந்துகொள்கிறார். ஆம்புலன்ஸின் சாவியும் இல்லை, டிரைவரும் இல்லை. இப்படியொரு இக்கட்டான சூழ்நிலையிலும் கார்த்திக் கொஞ்சம்கூட மனம் தளரவில்லை.

உடனே ஒரு மெக்கானிக்குக்குப் போன் செய்து நடந்த விஷயத்தைச் சொல்கிறார். அவர் கூறும் வழிமுறையின்படி, சாவி இல்லாமலேயே வயரிங் மூலம் ஆம்புலன்ஸை ஸ்டார்ட் செய்து, தானே வண்டியை ஓட்டத் தொடங்குகிறார்.

கார்த்திகை தீபம்: சாமுண்டீஸ்வரியின் உயிரைக் காப்பாற்ற கார்த்திக் எடுக்கும் அதிரடி முயற்சி! | Karthigai Deepam Today Episode 31 10 2026

இதையெல்லாம் தூரத்திலிருந்து பார்த்த ரமேஷ் அதிர்ச்சியடைந்து, உடனே சந்திரகலாவுக்குப் போன் செய்து விஷயத்தைச் சொல்கிறான்.

“கார்த்திக் சாவி இல்லாமலேயே ஆம்புலன்ஸை ஸ்டார்ட் செய்துவிட்டார்” என்று ரமேஷ் கூற, அதிர்ச்சியுடன் சிந்திக்கத் தொடங்குகிறாள் சந்திரகலா. இப்படிப் பரபரப்பான சூழ்நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US