கார்த்திகை தீபம் எபிசோட் அப்டேட்: வீட்டுக்குச் செல்ல மறுத்த சாமுண்டீஸ்வரி... அத்தைக்கு ஆதரவாக கார்த்திக் எடுக்கும் புதிய முடிவு!

By Karthick Raja Nov 07, 2026 07:20 AM GMT
Report

ZEE தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர் 'கார்த்திகை தீபம்'. ஒவ்வொரு நாளும் அடுத்தடுத்து வரும் எதிர்பாராத திருப்பங்களால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் இந்தத் தொடரில், சனிக்கிழமை எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதைப் பார்க்கலாம்.

வீட்டுக்கு வர முடியாது என உறுதியாகச் சொல்லும் சாமுண்டீஸ்வரி!

முந்தைய எபிசோடில் சாமுண்டீஸ்வரி கே.ஆர். வீட்டுக்குள் வருவாரா, மாட்டாரா என்ற எதிர்பார்ப்புடன் காட்சி முடிந்தது. ஆனால், பழைய நினைவுகளையும் நடந்த கசப்பான சம்பவங்களையும் நினைத்துப் பார்க்கும் சாமுண்டீஸ்வரி, இனிமேல் அந்த வீட்டுக்குள் வரப்போவதில்லை என்று உறுதியாகச் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிடுகிறார். இதனால் ராஜராஜன், சுவாதி, ரோகினி, ரேவதி என குடும்பத்தில் இருக்கும் அனைவரும் வருத்தத்தில் ஆழ்கின்றனர்.

கார்த்திகை தீபம் எபிசோட் அப்டேட்: வீட்டுக்குச் செல்ல மறுத்த சாமுண்டீஸ்வரி... அத்தைக்கு ஆதரவாக கார்த்திக் எடுக்கும் புதிய முடிவு! | Karthigai Deepam Today Serial Update

கோவிலுக்குச் சென்று அத்தையை அழைக்கும் கார்த்திக்!

சாமுண்டீஸ்வரி கோவிலில் இருப்பதைத் தெரிந்துகொள்ளும் கார்த்திக், உடனே அங்கு சென்று அவரைச் சமாதானப்படுத்த முயற்சி செய்கிறார். "அத்தை, நீங்க வீட்டுக்கு வாங்க..." என்று அன்பாக அழைக்கிறார். ஆனால், கார்த்திக் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் சாமுண்டீஸ்வரி மனம் மாறவில்லை. என்ன ஆனாலும் அந்த வீட்டுக்கு வர முடியாது என்பதில் உறுதியாக இருக்கிறார்.

சாமுண்டீஸ்வரியைப் பார்த்து கிண்டலடிக்கும் சிவனாண்டி!

சாமுண்டீஸ்வரி வீட்டுக்கு வராமல் வெளியேறிய விஷயத்தைக் கேள்விப்படும் சிவனாண்டி, சந்திரகலா, முத்துவேல் ஆகியோர் தங்களுடைய திட்டம் வெற்றி பெற்றுவிட்டதாக நினைத்து சந்தோஷப்படுகின்றனர். இதற்கிடையில், கோவிலில் தனியாக இருக்கும் சாமுண்டீஸ்வரியை நேரில் சந்திக்கும் சிவனாண்டியும் முத்துவேலும், "பார்த்தியா, இப்போ அனுபவி... உனக்கு இது தேவைதான்!" என்று கிண்டலாகப் பேசுகின்றனர். ஆனால், அவர்களுடைய பேச்சையெல்லாம் சாமுண்டீஸ்வரி பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் அமைதியாக இருக்கிறார்.

கார்த்திகை தீபம் எபிசோட் அப்டேட்: வீட்டுக்குச் செல்ல மறுத்த சாமுண்டீஸ்வரி... அத்தைக்கு ஆதரவாக கார்த்திக் எடுக்கும் புதிய முடிவு! | Karthigai Deepam Today Serial Update

அத்தைக்கு உதவ புதிய திட்டம் போடும் கார்த்திக்!

சாமுண்டீஸ்வரி வீட்டுக்கு வருவதில் பிடிவாதமாக இருப்பதைப் புரிந்துகொள்ளும் கார்த்திக், கோவிலில் தனியாக இருக்கும் அவருக்கு எந்தப் பிரச்சினையும் வந்துவிடக்கூடாது என்பதற்காகத் தனக்குத் தெரிந்த ஒருவரை அவருக்குத் துணையாக இருக்க ஏற்பாடு செய்கிறார்.

அதன்பிறகு மயிலைக் கூட்டிக்கொண்டு ஒரு சேட்டை நேரில் சந்திக்கும் கார்த்திக், நான்கைந்து பத்திரங்கள் எடுப்பது தொடர்பாகப் பேசுகிறார். அப்போது மயிலிடம், "என்கிட்ட ஒரு திட்டம் இருக்கு. இதை வச்சு கண்டிப்பா சாமுண்டீஸ்வரி அத்தைக்கு நம்மளால உதவி செய்ய முடியும்" என்று சொல்லி தனது புதிய திட்டத்தைப் பற்றிப் பேசத் தொடங்குகிறார்.

அடுத்து என்ன? கார்த்திக் போடும் அந்தப் புதிய திட்டம் என்ன?

அதன் மூலம் சாமுண்டீஸ்வரிக்கு உதவி செய்து மீண்டும் குடும்பத்துடன் சேர்த்து வைப்பாரா? சிவனாண்டியின் சதியை முறியடிப்பாரா? என்பதை அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US