அந்த படத்தின் கதை பிடித்தும் நோ சொன்ன தனுஷ்.. கார்த்திக் சுப்புராஜ் சொன்ன காரணம்!
கார்த்திக் சுப்புராஜ்
நாளைய இயக்குநர் நிகழ்ச்சியின் மூலம் தனது திறமையை நிரூபித்து, பின் பிட்சா படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். முதல் படத்திலேயே மாபெரும் வெற்றியை தன்வசப்படுத்தினார்.
இதன்பின் ஜிகர்தண்டா, இறைவி, பேட்ட, மகான், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என பல படங்களை கொடுத்தார். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் ரெட்ரோ. சூர்யா நடிப்பில் வெளியான இப்படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது.

காரணம்!
இந்நிலையில், தனுஷ் குறித்து கார்த்திக் சுப்புராஜ் பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில், " மேயாத மான் தான் ஸ்டோன் பென்ச்-ன் முதல் படம். நிறைய படங்கள் செய்திவிட்டாலும், முதல் அனுபவமாக `மேயாத மான்' மறக்க முடியாதது. 29 எங்களுக்கு மிகவும் ஸ்பெஷலான படம்.
நாங்கள் ராத்னவை தனுஷ் சாரிடம் அழைத்து சென்று கதை சொல்ல வைத்தோம். அவருக்கு கதை பிடித்திருந்தாலும், ஆக்ஷன் படங்கள் தொடர்ச்சியாக செய்யும் போது இதை நடித்தால் சரியாக இருக்காது என கூறி இளம் நடிகர் யாரையாவது நடிக்க வையுங்கள் என்று தெரிவித்தார்" என பகிர்ந்துள்ளார்.
