இனி நாங்கதான் நார்மல்.. எல்லாரும் தப்பா புரிஞ்சிக்கிட்டாங்க: டோரதி சர்ச்சைக்கு கார்த்திக் சுப்புராஜ் பதில்
சமீபத்தில் ரிலீஸ் ஆன டோரதி படம் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இது கலாச்சார சீரழிவு, படத்தின் கிளைமாக்சில் ஆண் - ஆண் கிஸ் செய்வது அருவருப்பாக இருப்பதாக பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் "இன்னும் 10 வருடத்தில் நாங்க தான் நார்மல், உங்களை அருவருப்பா பாப்பாங்க" என ஓரின ஈர்ப்பாளர்கள் ஆதரவாக வரும் வசனமும் கடும் எதிர்ப்பை சந்தித்து வருகிறது.

கார்த்திக் சுப்புராஜ் பதில்
இந்நிலையில் டோரதி படத்திற்கு எதிராக வரும் விமர்சனங்களுக்கு பதில் அளித்த கார்த்திக் சுப்புராஜ், "சிலர் படம் பார்க்காமல் தேவை இல்லாத விவாதங்களை கிளப்பி இருக்கின்றனர்."
"90களில் நடக்கும் கதை இது. 10 வருடங்கள் கழித்து தற்போது திருநங்கைகள் என்ன சூழ்நிலையில் இருக்கிறார்கள் என பார்க்க வேண்டும். அதை குறிப்பிட்டு தான் அப்படி ஒரு வசனம் வைக்கப்பட்டது" என இயக்குனர் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
நெகடிவ் விமர்சனங்கள் பற்றி கேட்டதற்கு, 'ட்விட்டர் என்பது ஒரு சின்ன உலகம். அதில் இருப்பவர்கள் கூறும் கருத்து மட்டுமின்றி படம் பார்க்க வருபவர்கள் நல்ல விதமாக தான் சொல்கின்றனர்' என அவர் கூறியுள்ளார்.
ஏபி டிவில்லியர்ஸ் டக்அவுட்: 42 வயது வீரரின் சிக்ஸர்மழை..தென் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் வெற்றி News Lankasri
நேபாளத்தில் மீண்டும் திடீர் வெள்ளப்பெருக்கு: அடித்து செல்லப்பட்ட 35 வீடுகள் மற்றும் பாலங்கள் News Lankasri
அமெரிக்க மாகாணத்தை புரட்டியெடுத்த இசையாஸ் சூறாவளி: நால்வர் பலி..அச்சுறுத்தும் பாதிப்பு News Lankasri
13 இராணுவ வீரர்களை சுட்டுக்கொன்றவருக்கு மரண தண்டனை: ஏற்றுக்கொள்ள முடியாதது - போப் லியோ News Lankasri