நடிகையின் உடல் அமைப்பை கேலி செய்த நபர்!! கடுப்பான இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்
கார்த்திகே சுப்புராஜ் இயக்கத்தில் லாரன்ஸ் - எஸ் ஜே சூர்யா நடிப்பில் உருவான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் கடந்த 10 தேதி வெளிவந்தது.
முதல் பாகத்தை காட்டிலும் இரண்டாம் பாகத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.
உடல் கேலி
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் வெற்றியை தொடர்ந்து சமீபத்தில் பத்திரிகையாளர் சந்திப்பில் கார்த்திக் சுப்புராஜ் கலந்துகொண்டார்.
அப்போது பத்திரிகையாளர் ஒருவர், "நடிகை நிமிஷா சித்தா படத்தில் அருமையாக நடித்திருந்தார். அவர் அழகாக இல்லை என்றாலும் படத்தில் அருமையான நடிப்பை வெளிப்படுத்தினார். ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் நடிக்க நிமிஷாவை நடிக்க வைக்க காரணம் என்ன?" என்று கேட்டார்.
இதற்கு பதில் அளித்த கார்த்திக் சுப்புராஜ், "அவுங்க அழகா இல்லை என்று நீங்க எப்படி சொல்லுவீங்க. அது உங்களுடைய மைண்ட் செட். நீங்கள் யாரையும் அழகா இல்லை என்று சொல்ல முடியாது என்று கூறியுள்ளார்.