அய்யனார் துணை சீரியல்: நிலா எடுத்த முடிவு.. விவாகரத்து பெறப்போகும் கார்த்திகா!! அதிர்ச்சியில் சேரன்...

By Karthick Raja Jun 29, 2026 05:02 AM GMT
Report

நிலா எடுத்த முடிவு

ரசிகர்களால் விரும்பி பார்க்கப்படும் சீரியல் அய்யனார் துணை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில், குடும்பத்தில் உள்ள அனைவரும் நன்றாக உழைக்கிறார்கள். ஆனால், வீட்டை நன்றாக வைத்துக்கொள்ளவில்லை. இதனால், வேலை செய்யும் அனைவரும் தங்களுடைய சம்பளத்தில் இருந்து ஒரு பங்கை வீட்டை சரி செய்வதற்காக தர வேண்டும் என நிலா கூறியுள்ளார்.

அய்யனார் துணை சீரியல்: நிலா எடுத்த முடிவு.. விவாகரத்து பெறப்போகும் கார்த்திகா!! அதிர்ச்சியில் சேரன்... | Karthika Divorce Shocks Cheran In Ayyanar Thunai

அந்த பணத்தை வைத்து வீட்டிற்கு சோஃபா, டிவி போன்ற பொருட்களை வாங்க நிலா முடிவு செய்துள்ளார். இதற்கு அனைவரும் சம்மதம் தெரிவிக்கின்றனர். ஆனால், நடேசன் 'நான் பணம் தர மாட்டேன்' என கூறுகிறார். 'சரி நீங்கள் பணம் தர வேண்டாம், அதற்கு பதிலாக நீங்கள் என்னிடம் பேசவேண்டாம்' என நிலா சொல்கிறார். இதனால் உடனடியாக பணம் தர ஒப்புக்கொள்கிறார் நடேசன்.

TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா

TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா

வானதி - பாண்டியன்

இதன்பின், வானதி மற்றும் பாண்டியன் இருவரும் மெடிக்கல் ஷாப்பை வாடகைக்கு எடுத்து நடத்த பணத்தோடு அங்கு செல்கிறார்கள். அட்வான்ஸ் பணத்தை கொடுத்து, நாளை முதல் இந்த மெடிக்கல் ஷாப்பை நடத்த முடிவு செய்கிறார் வானதி. அதற்காக ஒரு சிறிய விழாவையும் நடத்த முடிவு செய்கின்றனர்.

அய்யனார் துணை சீரியல்: நிலா எடுத்த முடிவு.. விவாகரத்து பெறப்போகும் கார்த்திகா!! அதிர்ச்சியில் சேரன்... | Karthika Divorce Shocks Cheran In Ayyanar Thunai

விவாகரத்து பெறப்போகும் கார்த்திகா

தொடர்ந்து அய்யனார் துணை குடும்பத்தில் உள்ளவர்களின் வாழ்க்கையில் நல்ல விஷயங்கள் வருகின்றன. இந்த நிலையில், சேரன் கார்த்திகை சந்திக்கிறார். அவர் கோவிலுக்கு தனியாக செல்வதை அறிந்துகொண்டு, அவருடன் செல்கிறார் சேரன். அப்போது கார்த்திகாவின் வாழ்க்கை குறித்து விசாரிக்கிறார். சேரன் இதை கேட்டவுடன் கண்கலங்கி அழுகிறார் கார்த்திகா.

அய்யனார் துணை சீரியல்: நிலா எடுத்த முடிவு.. விவாகரத்து பெறப்போகும் கார்த்திகா!! அதிர்ச்சியில் சேரன்... | Karthika Divorce Shocks Cheran In Ayyanar Thunai

காரணம், கார்த்திகாவின் புகுந்த வீட்டில் அவரை கொடுமைப்படுத்தியுள்ளனர். திருமணத்திற்கு பின் கார்த்திகா போட்டு சென்ற நகைகளை எல்லாம் அவருடைய கணவர் விற்று கடனை அடைத்துவிட்டார். அதன்பின், கார்த்திகாவை மாமனார் மற்றும் மாமியார் கொடுமை செய்துள்ளனர். மேலும், தனக்கு விவாகரத்து வேண்டும் என்றும் கார்த்திகாவின் கணவர் கூறியுள்ளார். இதை கேட்டவுடன் சேரன் அதிர்ச்சியில் உறைந்துபோய்விட்டார்.

நாளை

கார்த்திகாவின் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என சேரன் வருத்தப்படுகிறார். இதையடுத்து, நாளை நடக்கவிருக்கும் புரோமோ எபிசோட் இறுதியில் ஒளிபரப்பானது. இதில், சோழனிடம் தன்னை தேனிலவுக்கு அழைத்து செல்லும்படி கேட்கிறார் நிலா. இதை கேட்டவுடன் மகிழ்ச்சியடைகிறார் சோழன்.

அய்யனார் துணை சீரியல்: நிலா எடுத்த முடிவு.. விவாகரத்து பெறப்போகும் கார்த்திகா!! அதிர்ச்சியில் சேரன்... | Karthika Divorce Shocks Cheran In Ayyanar Thunai

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US