சாமுண்டீஸ்வரி காப்பாற்றிய கார்த்திக்.. அடுத்த சதியை தொடங்கிய சந்திரகலா -

By Tony Sep 16, 2026 11:00 AM GMT
Report

கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சாமுண்டீஸ்வரி போலீஸ் கைது செய்ய கார்த்திக் சம்பந்தப்பட்ட குற்றவாளியை தேடிய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது கார்த்திக் உண்மையான குற்றவாளியை கண்டுபிடித்து போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்து சாமுண்டீஸ்வரியை விடுவிக்கிறான்.

ஆனாலும் சாமுண்டீஸ்வரி இதெல்லாம் கார்த்தியின் திட்டம் தான் என தவறாக புரிந்து கொள்கிறார். இதையடுத்து வீட்டுக்கு வந்த கார்த்திக் நடந்த விஷயங்களை சொல்ல பரமேஸ்வரி பாட்டி வருத்தப்படுகிறார். மேலும் ரேவதி இன்னும் சாப்பிடவில்லை என்று தெரிந்து கார்த்திக் அவளுக்கு சாப்பாடு ஊட்டி விடுகிறான். அடுத்த நாள் காலையில் ரேவதிக்கு பெட் காஃபி கொடுத்து அவளை எழுப்பி கையில் அடிபட்டு இருப்பதால் பல் துலக்கி விடுகிறான்.

சாமுண்டீஸ்வரி காப்பாற்றிய கார்த்திக்.. அடுத்த சதியை தொடங்கிய சந்திரகலா - | Karthikai Deepam Today Episode Review

இதன் பிறகு கோவில் திருவிழாவிற்காக காப்பு கட்ட வேண்டும் எனவும் அதற்கு ராஜராஜன் வரவேண்டும் எனவும் ஊர் பெரியவர்கள் கார்த்தி இடம் சொல்கின்றனர். மறுபக்கம் சந்திரகலா சாமுண்டீஸ்வரியிடம் காப்பு கட்டுவதற்கு மாமாவை அனுப்பி வைக்கக் கூடாது என சொல்லி ஏற்றி விடுகிறாள். சாமுண்டீஸ்வரியும் ராஜராஜனை அனுப்பக்கூடாது என முடிவுக்கு வருகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US