வலிமை படத்தில் முதல் முதலில் அஜித்துக்கு வில்லனாக நடிக்கவிருந்தது கார்த்திகேயா கிடையாதாம்.. இந்த நடிகர் தானாம்
கடந்த 24ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளிவந்த திரைப்படம் நடிகர் அஜித்தின் வலிமை.
எச். வினோத் இயக்கத்தில் உருவாகி போனி கபூர் தயாரித்திருந்த இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும், இதுவரை வெளிவந்த அணைத்து படங்களை விட, வலிமை படத்தின் வசூல் பிரமாண்டமாக இருக்கிறது என்று போனி கபூர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். விரைவில் வசூல் விவரத்தையும் வெளியிடவுள்ளார்.
வலிமை படத்தில் அஜித்தை தாண்டி ரசிகர்கள் மத்தியில் அப்லாஸ் பெற்றவர்கள், நடிகை ஹுமா குரேஷி மற்றும் வில்லன் கார்த்திகேயா.
இதில் மிகவும் பயகாரணமான வில்லன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்த கார்த்திகேயாவிற்கு முதல் முதலில் நடிக்கவிருந்தது, பிரபல நடிகர் பிரசன்னா தானாம்.
அப்போது சில காரணங்களால், வலிமை படத்தின் பிரசன்னாவால் நடிக்கமுடியாமல் போனது. இதன்பின், இந்த கதாபாத்திரத்தில் நடிக்க கார்த்திகேயாவை படக்குழு அணுகியுள்ளனர்.