இதை மட்டும் மறக்கவே மாட்டேன்: அஜித் ரசிகர்கள் பற்றி பேசிய வலிமை வில்லன்
அஜித்தின் வலிமை படம் நேற்று தியேட்டர்களில் வெளியாகி வசூல் சாதனை படைத்து வருகிறது. முதல் நாளில் தமிழ்நாட்டில் 36 கோடி ருபாய் வசூல் ஆகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
போலீசாக நடித்திருக்கும் அஜித்துக்கு வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடித்து உள்ளார். அவரது நடிப்புக்கும் ரசிகர்கள் தற்போது பாராட்டு மழை பொழிந்துவருகின்றனர்.
இந்நிலையில் கார்த்திகேயா ட்விட்டரில் ரசிகர்களுக்கு நன்றி கூறி இருக்கிறார். "நரேன் - எனக்கு வாழ்நாள் முழுக்க நினைவிருக்கும். மறக்கவே மாட்டேன். வியப்பில் இருக்கிறேன் என சொல்வது சின்ன வார்த்தை. என்னை நம்பியதற்காக வினோத் சாருக்கு நன்றி. "
"அஜித் சாரை பார்க்க வாய்ப்பு தந்த கடவுளுக்கு நன்றி. ஆதரவு மற்றும் அன்பு தரும் அஜித் ரசிகர்களுக்கு தான் மிகப்பெரிய நன்றி" என அவர் கூறி உள்ளார்.
#NAREN a life time memory ..
— Kartikeya (@ActorKartikeya) February 25, 2022
overwhelmed is a very small word i can use.#Vinoth sir,Super great-full for believing i can pull this off.
#Ajith sir, thank you god for making me meet a human being like this.
And biggest thanks to #Ajith sir fans for the amazing support and love? pic.twitter.com/NomVKYY3QT