இந்த படத்தை பார்த்ததற்கே ஒரு சொகுசு கார் கொடுக்கணும்.. கலாய்த்த அரசியல்வாதி

By Parthiban.A Sep 11, 2023 02:10 PM GMT
Report

ஜெயிலர்

ஜெயிலர் படம் பற்றி தான் கடந்த ஒரு மாதமாக பரபரப்பான பேச்சு இருந்து வருகிறது. இந்த படம் 600 கோடி என்ற பிரம்மாண்ட மைல்கல்லை கடந்த நிலையில் தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸுக்கு பல நூறு கோடி லாபம் கிடைத்தது.

அதற்காக தயாரிப்பாளர் கலாநிதி மாறன் சூப்பர்ஸ்டார் ரஜினி, இயக்குனர் நெல்சன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு கோடிக்கணக்கில் மதிப்புள்ள சொகுசு கார் பரிசாக கொடுத்தார்.

கார்த்தி சிதம்பரம்  

தற்போது ஜெயிலர் படம் ஓடிடியில் வெளியாகி இருக்கும் நிலையில், அரசியல்வாதியான கார்த்தி சிதம்பரம் மறைமுகமாக படத்தை விமர்சித்து இருக்கிறார்.

"நேற்று இரவு ஒரு தமிழ் திரைப்படம் பார்த்தேன். அந்த திரைப்படம் பார்த்ததற்கு படத்தின் தயாரிப்பாளர் எனக்கு ஒரு சொகுசு காரை பரிசாக அளித்திருக்க வேண்டும்" என அவர் கலாய்த்து இருக்கிறார்.

இந்த படத்தை பார்த்ததற்கே ஒரு சொகுசு கார் கொடுக்கணும்.. கலாய்த்த அரசியல்வாதி | Karti Chidambaram Tweet About Jailer Movie

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US