ஜீ தமிழ் தமிழா தமிழா நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது ஏன்?- கரு.பழனியப்பன் ஓபன் டாக்
கரு.பழனியப்பன்
தமிழ் சினிமாவில் கடந்த 1991ம் ஆண்டு பார்த்திபன் இயக்கத்தில் வெளியான ஹவுஸ்புல் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் கரு.பழனியப்பன்.
அதைத் தொடர்ந்து தான் துள்ளாத மனமும் துள்ளும், பெண்ணின் மனதை தொட்டு உள்ளிட்ட படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்துவந்த அவர் பார்த்திபன் கனவு என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.
அதன்பிறகு சிவப்பதிகாரம், பிரிவோம் சந்திப்போம், மந்திரப்புன்னகை, சதுரங்கம் என சில திரைப்படங்களை இயக்கி இருந்தார். வெள்ளத்திரையில் கலக்கிவந்த அவர் திடீரென ஜீ தமிழ் நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரைக்கு வந்தார்.
தமிழா தமிழா என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார்.
வெளியேறியது ஏன்
ஹிட்டாக ஓடிக் கொண்டிருந்த அந்த நிகழ்ச்சியில் இருந்து திடீரென கரு.பழனியப்பன் விலகினார். தற்போது ஆவுடையப்பன் அந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
தற்போது தமிழா தமிழா நிகழ்ச்சியில் இருந்து தான் ஏன் வெளியேறினேன் என்று கரு. பழனியப்பன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதில் அவர், அதில் எனக்கும் சேனல் தரப்பினருக்கும் ஒரு இடத்தில் முரண்பாடுகள் ஏற்பட்டது.
ஒன்று நான் விட்டுக் கொடுக்க வேண்டும். இல்லை என்றால் அவர்கள் விட்டுக் கொடுக்க வேண்டும். ஆனால் ஒருவரே எப்போதும் விட்டுக்கொடுத்து கொண்டு இருக்க முடியாது.
அந்த இடத்தில் அங்கே சமனான நிலை ஏற்படவில்லை. அதனால் நான் விலகினேன் என்று கரு பழனியப்பன் கூறி இருக்கிறார்.