சிவகுமாரும் அவர் பிள்ளைகளும் தான் ஞானவேல்ராஜா பின்னால் இருப்பது.. கொந்தளித்த பிரபலம்
பருத்திவீரன் படத்தில் பொய் கணக்கு எழுதி பணத்தை திருடிவிட்டார் என இயக்குனர் அமீர் பற்றி தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பேட்டி கொடுத்ததற்கு பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இது பற்றி தற்போது கரு.பழனியப்பன் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், "பொதுவெளியில் ஒரு இயக்குனரை திருடன் என்றும், ஒன்றும் தெரியாதவன் என்றும், என் காசில் தொழில் பழகியவன் என்றும் character assassination செய்வது அயோக்கியதனம்."

"அமீரின் பருத்திவீரன், அமீரின் பருத்திவீரன் என்று சொல்லச் சொல்ல அவர் ஜெயித்து கொண்டிருக்கிறார் என்று பொருள். பருத்திவீரன் படத்தின் உயரத்தை தொட ஒவ்வொரு படமாக எடுத்து எடுத்து ஞானவேல் அவரைச் சார்ந்தவர்களும் இன்று வரை தோற்றுக் கொண்டே இருக்கிறார்கள்."
"ஞானவேல் பின்னால் திரு சிவகுமாரும் அவர் பிள்ளைகளும் இருப்பார்களோ என்று சந்தேகத்தின் நிழல் விழுவதை தவிர்க்க முடியவில்லை" என கரு பழனியப்பன் கூறி இருக்கிறார்.


பாரதிராஜா
மேலும் இயக்குனர் பாரதிராஜாவும் அமீருக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.
"பருத்திவீரன் படத்திற்க்கு முன்பு அமீர் இரண்டு படம் இயக்கி, அதில் ஒன்றை தயாரித்தும் இருக்கிறார். அவர் உங்கள் படத்தில் தான் வேலை கற்றுக்கொண்டார் என்பதை எக்காளமாக கூறி வன்மமாக சிரிப்பது என்போன்ற படைப்பாளிகளையும் அவமதிக்கும் செயலாகும்" என பாரதி ராஜா கூறி இருக்கிறார்.
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான்: அடுத்த 100 நாட்களில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடிவரும்! Manithan
325 ஓட்டங்கள் குவித்தும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வி: இலங்கை கேப்டன் கூறிய காரணம் News Lankasri
லொட்டரியில் வென்ற 1 மில்லியன் பவுண்டு - அண்டை வீட்டாரின் கனவை நிறைவேற்றிய பிரித்தானிய பெண் News Lankasri
ஜேர்மனியில் வன்முறையாக வெடித்த இளைஞர்கள் போராட்டம்... கடைகளைச் சூறையாடிய கலவரக்காரர்கள் News Lankasri