ஜனநாயகன் விவகாரம்.. விஜய்யை தாக்கி பேசிய நடிகர் கருணாஸ்
விஜய்யின் ஜனநாயகன் படம் பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் சென்சார் சான்றிதழ் பெறுவதில் பிரச்சனை எழுந்ததால் ரிலீஸ் தள்ளிப்போய் இருக்கிறது.
அது பற்றிய வழக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அதன் தீர்ப்பு வந்தபிறகு தான் படம் ரிலீஸ் ஆகுமா இல்லையா என்பது தெரியவரும்.

கருணாஸ் விமர்சனம்
ஜன நாயகன் படம் பிரச்சனையில் சிக்கி இருக்கும் நிலையில் அது பற்றி நடிகர் விஜய் இதுவரை அந்த கருத்தும் தெரிவிக்கவில்லை, எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. அது பற்றி நடிகர் கருணாஸ் விமர்சித்து இருக்கிறார்.
"எதுவும் பேச மாட்டேன். டப்பிங்கிற்கு மட்டும் தான் வாய் திறப்பேன் என்று சொன்னால் எப்படி" என விஜய்யை அவர் தாக்கி பேசி இருக்கிறார்.
கருணாஸ் தற்போது திமுக ஆதரவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
