லியோ, கூலியை முந்திய கருப்பு.. வசூல் மன்னனாக மாஸ் கம்பேக் கொடுத்துள்ள சூர்யா
கருப்பு
தமிழ் சினிமாவில் மீண்டும் வசூல் மன்னனாக மாஸ் கம்பேக் கொடுத்துள்ளார் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் கடந்த 15ஆம் தேதி வெளிவந்த கருப்பு திரைப்படம் ரசிகர்களால் திரையரங்குகளில் கொண்டாடப்பட்டு வருகிறது.

இப்படத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்க, த்ரிஷா கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும், சாய் அப்யங்கர் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். எதிர்பார்ப்புடன் வெளிவந்த கருப்பு திரைப்படம் முதல் நாளில் இருந்து வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.
புக் மை ஷோ
இந்த நிலையில், புக் மை ஷோவில் படம் வெளிவந்து இரண்டாவது நாளில், அதாவது முதல் சனிக்கிழமை அன்று அதிக டிக்கெட்ஸ் புக் செய்யப்பட்ட தமிழ் திரைப்படங்களின் விவரம் வெளியாகியுள்ளது.
இதில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்திற்கு 1.01 மில்லியன் டிக்கெட்ஸ் புக் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அசைக்க முடியாத நம்பர் 1 இடத்தில் இப்படம் உள்ளது. இதை தொடர்ந்து லியோ - 619K டிக்கெட்ஸ், கூலி - 481K டிக்கெட்ஸ் விற்பனை செய்யப்பட்டு அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

இந்த நிலையில், கருப்பு திரைப்படம் லியோ மற்றும் கூலி ஆகிய இரண்டு திரைப்படங்களின் புக்கிங் சாதனைகளையும் முந்திவிட்டது. ஆம், படம் வெளிவந்து முதல் சனிக்கிழமை அன்று கருப்பு திரைப்படத்திற்கு 690K டிக்கெட்ஸ் புக்கிங் ஆகியுள்ளது. இதன்மூலம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.