12 நாட்களில் தமிழ்நாட்டில் கருப்பு திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
கருப்பு
சூர்யா, ஆர்.ஜே. பாலாஜி முதல் முறையாக கூட்டணி அமைத்த கருப்பு திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றி பெற்றுள்ளது. சொல்லப்போனால், இதுவரை சூர்யாவின் திரை வாழ்க்கையில் எந்த ஒரு திரைப்படமும் செய்ய முடியாத வசூல் சாதனைகளை இப்படம் படைத்துள்ளது.

இதுவரை 12 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கருப்பு திரைப்படம் கடந்திருக்கும் நிலையில், உலகளவில் ரூ. 275 கோடி வசூல் செய்துள்ளது. உலகளவில் மட்டுமின்றி, தமிழ்நாட்டில் 7 நாட்களுக்குள் ரூ. 100 கோடியை கடந்துள்ளது.
தமிழக வசூல்
இந்த நிலையில், 12 நாட்களில் கருப்பு திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் மட்டுமே இதுவரை இப்படம் ரூ. 140 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

கண்டிப்பாக ரூ. 150 கோடியை தமிழ்நாட்டில் கடந்துவிடும் என்பது உறுதியாக தெரிகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் கருப்பு திரைப்படம் இனி வரும் நாட்களில் என்னென்ன வசூல் சாதனைகளை படைக்கப்போகிறது என்று.