பாக்ஸ் ஆபிஸ்: வசூல் வேட்டையாடி வரும் கருப்பு.. சாதனைகளை படைக்கும் நடிகர் சூர்யா
கருப்பு
சூர்யா - ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவாகி பாக்ஸ் ஆபிஸில் வேட்டையாடி வரும் திரைப்படம் கருப்பு. இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, திரிஷா, இந்திரன்ஸ், அனாகா, ஷிவதா ஆகியோர் நடித்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் சென்சேஷனல் இசையமைப்பாளராக வலம் வரும் சாய் அப்யங்கர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கடந்த மே-15ஆம் தேதி வெளிவந்த இப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும், வசூலில் நல்ல வரவேற்பை பெற்றது.
வசூல்
ஒவ்வொரு புதிய திரைப்படம் வெளிவரும்போதும், அப்படத்தின் வசூல் குறித்து விவரங்களை நாம் பார்ப்போம். அந்த வகையில், 2026ஆம் ஆண்டின் தமிழ் சினிமாவின் பிளாக்பஸ்டராக மாறியுள்ள கருப்பு திரைப்படத்தின் வசூல் பற்றி தொடர்ந்து பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில், 21 நாட்களில் இப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, 21 நாட்களில் கருப்பு உலகளவில் ரூ. 321 கோடி வசூல் செய்துள்ளது. இதன் மூலம் தமிழ் சினிமா வரலாற்றில் அதிக வசூல் செய்த டாப் 25 திரைப்படங்களில் கருப்பு திரைப்படமும் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஹார்முஸ் நீரிணையில் வெடித்து சிதறிய எண்ணெய் கப்பல்- உலக எரிசக்தி விநியோகத்திற்கு அச்சுறுத்தல் News Lankasri
சீனாவில் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து... லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றம் News Lankasri
பூமிக்கு திரும்பிய Soyuz MS -28 விண்கலம்: 241 நாட்கள் வெற்றிகரமாக முடிந்த விண்வெளி பயணம் News Lankasri