கருப்பு படத்தில் நடிப்பதற்காக நடிகர் சூர்யா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
கருப்பு படம்
கடந்த வருடம் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்க ரெட்ரோ என்ற திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
அதன்பின் இந்த வருடம் சூர்யா நடிப்பில் வெளியாகப்போகும் முதல் படம் கருப்பு. ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா, த்ரிஷா ஜோடியாக நடிக்க நட்டி நட்ராஜ், மலையாள நடிகர் இந்திரன்ஸ், நடிகை சுவாசிகா, நகைச்சுவை நடிகர் யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக எஸ்.ஆர்.பிரபு இப்படத்தை தயாரிக்க சாய் அபியங்கர் இசையமைத்திருக்கிறார்.

சம்பளம்
கருப்பு திரைப்படம் கடந்த ஆண்டே ரிலீஸ் ஆவதாக இருந்தது.

ஆனால் படம் ரிலீஸ் ஆக பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க ரிலீஸ் தேதி தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. இறுதியாக இன்று மே 14ம் தேதி திரைக்கு வந்துள்ளது. தமிழக அரசு கருப்பு படத்திற்கு காலை 9 மணி சிறப்பு காட்சி திரையிட ஒப்புதல் வழங்கினர், ஆனால் திடீரென அந்த காட்சி ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
கருப்பு படத்தில் வக்கீலாக நடித்துள்ள சூர்யா இப்படத்திற்காக ரூ. 45 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இலங்கைத் தமிழ் ரொம்ப பிடிக்கும் -சிட்னியில் ரசிகர்களை கவர்ந்த த்ரிஷா... விஜய் குறித்து ரசிகர் எழுப்பிய கேள்வி! Manithan
பிரித்தானியாவின் புதிய பிரதமராகும் ஆன்டி பர்னாம்: அவரது குடும்பம் குறித்து சில தகவல்கள் News Lankasri
திங்கட்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள் வெளியீடு - பொதுமக்களுக்கு மின்வாரியம் அறிவுறுத்தல் IBC Tamilnadu
சுக்கிரன் மீது விழும் ராகுவின் பார்வை... ஆடி மாதத்தில் எதிர்பாராத நிதி ஆதாயத்தினை பெறும் 5 ராசிகள் Manithan