தமிழ்நாட்டில் கருப்பு திரைப்படம் முதல் நாள் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்
கருப்பு
புதிதாக வெளிவந்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் கருப்பு. பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்ட இப்படம் பைனான்ஸ் பிரச்சனை காரணமாக ரிலீஸ் ஆக முடியாமல் இருந்தது.

ஆனால், அந்த பிரச்சனைகளை எல்லாம் சரி செய்து நேற்று திரையரங்குகளில் சூர்யாவின் கருப்பு திரைப்படம் ரிலீஸ் ஆனது. ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவான இப்படம் திரையரங்குகளை திருவிழா கோலமாக மாற்றியது.
திரையரங்கில் படம் பார்க்க வந்தவர்களுக்கு சாமி வந்ததை கூட சில வீடியோக்களில் நாம் பார்த்திருந்தோம். அந்த அளவிற்கு கருப்பு திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் ரீச் கிடைத்துள்ளது.
தமிழ்நாடு வசூல்
ஒவ்வொரு புதிய திரைப்படம் வெளிவரும்போதும், அப்படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வத்துடன் இருப்பார்கள்.

இந்த நிலையில், கருப்பு திரைப்படம் முதல் நாள் தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் முதல் நாள் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 13 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.