தமிழ்நாட்டில் வசூல் வேட்டையாடி வரும் கருப்பு.. 3 நாட்கள் வசூல் விவரம்
கருப்பு
கடந்த வாரம் வெளியான கருப்பு திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ருத்ரதாண்டவம் ஆடி வருகிறது. சூர்யா - ஆர்.ஜே. பாலாஜி காம்போவில் உருவான இப்படம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், சொன்ன தேதியில் ரிலீஸ் ஆகாததால் ரசிகர்கள் சற்று வருத்தமடைந்தனர். ஆனால் காத்திருந்ததற்கு ஒர்த் என சொல்லும் அளவிற்கு படம் மிகச்சிறப்பாக இருந்தது. கமர்ஷியலாக பல ஆண்டுகளாக சூர்யாவிற்கு இப்படியொரு வெற்றி கிடைக்கவில்லை.

கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்கு பின் நடிகர் சூர்யா வசூல் மன்னனாக தமிழ் சினிமாவில் கம்பேக் கொடுத்துள்ளார். இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
தமிழக வசூல் விவரம்
உலகளவில் ரூ. 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் மைல்கல்லை இப்படம் கடந்திருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் இப்படம் 3 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, கருப்பு திரைப்படம் தமிழ்நாட்டில் 3 நாட்களில் ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. 3 நாட்களில் ரூ. 50 கோடியை கடந்துள்ள கருப்பு திரைப்படத்தின் வசூல், விரைவில் ரூ. 100 கோடியை தமிழ்நாட்டில் மட்டுமே வசூல் செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
மீண்டும் முடிவை மாற்றிய ட்ரம்ப்... மத்திய கிழக்கு நாடுகள் ஒப்புக்கொண்டதாகவும் அறிவிப்பு News Lankasri
பழனி கோயில் நில விவகாரத்தில் அரசுக்கு எதிராக திட்டமிட்ட பிரசாரம் – அமைச்சர் ரமேஷ் குற்றச்சாட்டு IBC Tamilnadu