சூர்யாவின் திரை வாழ்க்கையில் இதுவரை நடக்காத விஷயம்.. தமிழக வசூலில் கருப்பு திரைப்படம் ருத்ரதாண்டவம்

By Karthick Raja May 31, 2026 09:40 AM GMT
Report

கருப்பு 

கடந்த மே 15ஆம் தேதி வெளிவந்த கருப்பு திரைப்படத்தின் வசூல் விவரங்கள் குறித்து தொடர்ந்து பார்த்து வருகிறோம். அந்த வகையில் இதுவரை இப்படம் தமிழ்நாட்டில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதைப்பற்றித்தான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கிறோம்.

சூர்யாவின் திரை வாழ்க்கையில் இதுவரை நடக்காத விஷயம்.. தமிழக வசூலில் கருப்பு திரைப்படம் ருத்ரதாண்டவம் | Karuppu Movie Tamilnadu Box Office

ஆர்.ஜே. பாலாஜியின் மாஸ் மிரட்டலான இயக்கத்தில், சூர்யாவின் வெறித்தனமான நடிப்பில் உருவான திரைப்படம் கருப்பு. இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து பல ஆண்டுகளுக்கு பின் நடிகை திரிஷா நடித்திருந்தார். இளம் வயதிலேயே இசையால் தமிழ் சினிமாவில் பட்டையை கிளப்பி வரும் சாய் அப்யங்கர் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

சூர்யாவின் திரை வாழ்க்கையில் இதுவரை நடக்காத விஷயம்.. தமிழக வசூலில் கருப்பு திரைப்படம் ருத்ரதாண்டவம் | Karuppu Movie Tamilnadu Box Office

பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வெளிவந்த கருப்பு திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனாலும், முதல் நாளில் இருந்தே வசூலில் ருத்ரதாண்டவம் ஆடி வருகிறது. ரூ. 100 கோடி, ரூ. 200 கோடி, ரூ. 300 கோடி என தொடர்ந்து 16 நாட்களில் மாபெரும் சாதனைகளை பாக்ஸ் ஆபிஸில் படைத்துள்ளது.

தமிழக வசூல்

உலகளவில் எப்படி தொடர் சாதனைகளை வசூலில் படைத்து வருகிறதோ, அதேபோல் தமிழ்நாட்டிலும் சாதனைகளில் குறை வைக்கவே இல்லை. சூர்யா நடிப்பில் இதற்கு முன் வெளிவந்த எந்த திரைப்படமும் தமிழ்நாட்டில் ரூ. 150 கோடிக்கும் மேல் வசூல் செய்ததில்லை. ஆனால், கருப்பு திரைப்படம் குறுகிய நாட்களிலேயே ரூ. 150 கோடியை கடந்துவிட்டது.

சூர்யாவின் திரை வாழ்க்கையில் இதுவரை நடக்காத விஷயம்.. தமிழக வசூலில் கருப்பு திரைப்படம் ருத்ரதாண்டவம் | Karuppu Movie Tamilnadu Box Office

பிளாக்பஸ்டர் வெற்றியடைந்துள்ள கருப்பு திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் 16 நாட்களை கடந்துள்ள நிலையில், இதுவரை ரூ. 159 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் தமிழ்நாட்டில் இப்படம் எவ்வளவு வசூல் செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US