தமிழ்நாட்டில் கருப்பு திரைப்படம் செய்துள்ள மொத்த வசூல்.. எவ்வளவு தெரியுமா
வசூல்
ஒவ்வொரு திரைப்படத்தின் வெற்றியும் பாக்ஸ் ஆபிஸ் வசூலை வைத்துத்தான் நிர்ணயிக்கப்படுகிறது. அதுவும் உச்ச நட்சத்திரங்களின் படங்கள் என்றால் அதன் வசூல் விவரங்களை தெரிந்துகொள்ள ரசிகர்களும் ஆர்வத்துடன் காத்திருப்பார்கள்.

தயாரிப்பு நிறுவனங்களும் ரசிகர்களை குஷியாக்கும் வகையில் படத்தின் வசூல் விவரங்களை சமீபகாலமாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து வருகின்றனர்.
கருப்பு
இந்த நிலையில், 2026-ஆம் ஆண்டு தமிழ் சினிமாவின் ப்ளாக்பஸ்டர் திரைப்படமாக மாறியுள்ள கருப்பு திரைப்படம்தான் தற்போது வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. உலகளவில் ரூ. 335 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ள இப்படம் சூர்யாவின் கேரியர் பெஸ்ட்டாக மாறியுள்ளது.
சரி, உலகளவில் ரூ. 335 கோடிக்கும் மேல் வசூலித்துள்ள கருப்பு தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா? இதுவரை 32 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் கருப்பு, தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 175 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

இதன்மூலம் தமிழகத்தில் அதிக வசூலித்த டாப் 5 தமிழ் திரைப்படங்களில் கருப்பும் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.