கருப்பு 9 மணி காட்சிகள் ரத்து.. படம் வருமா வராதா? RJ பாலாஜியே காட்டமாக போட்ட பதிவு
RJ பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்து இருக்கும் கருப்பு படம் நாளை மே 14ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. ரசிகர்களும் அதிகம் எதிர்பார்ப்புடன் படத்தை தியேட்டரில் பார்க்க காத்துக்கொண்டிருக்கின்றனர்.
காலையில் 9 மணிக்கு சிறப்பு காட்சி போட அனுமதியும் அரசு வழங்கி இருக்கிறது. ஆனால் தற்போது பைனான்ஸ் பிரச்சனை காரணமாக கருப்பு படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் எழுந்து இருக்கிறது. பல தியேட்டர்கள் 9 மணி காட்சியை ரத்து செய்து இருக்கின்றன.

RJ பாலாஜி பதிவு
இந்நிலையில் இந்த பிரச்சனை தீருமா என உறுதியாக தெரியவில்லை என இயக்குனர் RJ பாலாஜி தெரிவித்து இருக்கிறார்.
"பிரச்சனையை சரி செய்ய தயாரிப்பாளர்கள் முயற்சி செய்கிறார்கள். இந்த படத்திற்கு எப்போதும் தடைகள் தான் வந்திருக்கிறது. கடவுள் அத்தனை தடைகளையும் கடந்து 32 மாதங்கள் கழித்து இங்கே கொண்டு வந்திருக்கிறார். இந்த முறையும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது" என RJ பாலாஜி கூறி உள்ளார்.
Dearest fans, I dont have a concrete answer to the current situation. Producers are doing their best to solve the hurdles. This film has always had hurdles, and somehow God has made us sail through all that and here we are after 32 months. This time as well, I have faith,…
— RJ Balaji (@RJ_Balaji) May 13, 2026