வில்லன் ஆர்.ஜே. பாலாஜி!! சூர்யா டபுள் ஆக்ஷன்? கருப்பு டீசரில் இத்தனை சர்ப்ரைஸா
கருப்பு
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் மிரட்டலாக உருவாகியுள்ள திரைப்படம் கருப்பு. இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளனர். இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து த்ரிஷா, ஸ்வாசிகா ஆகியோர் நடித்துள்ளனர்.
இன்று சூர்யாவின் பிறந்தநாள் என்பதால், கருப்பு படத்தின் போஸ்டர்கள் மற்றும் அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த டீசர் வீடியோ வெளிவந்தது. சும்மா மிரட்டலாக அமைந்திருந்த இந்த டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
இத்தனை சர்ப்ரைஸா
இந்த நிலையில், டீசரில் உள்ள சர்ப்ரைஸ் என்னவெல்லாம் என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
கருப்பு டீசரில், சூர்யா ஒருவரின் சவால்விட்டு கோபத்துடன் பேசுகிறார். அவர் வேறு யாருமில்லை படத்தின் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜிதான். அவர் இப்படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார் என கூறப்படுகிறது.
டீசரில் வரும் ஒரு காட்சியில், சூர்யாவின் கையை வேறொரு நபரின் கை பிடித்துபோல் உள்ளது. ஆனால், அவர் யார் என காட்டவில்லை. அதுவும் சூர்யாதான் என தகவல் கூறுகின்றனர். ஒருவர் கருப்பு சாமி என்றும், மற்றொருவர் வழக்கறிஞர் என இரட்டை வேடத்தில் சூர்யா நடித்துள்ளாராம்.
மேலும் இந்த டீசரில் மலையாள நடிகர் இந்திரன்ஸ் மற்றும் இளம் மலையாள நடிகை அஹானா மாயா ரவி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அஹானா மாயா ரவி மளையாத்தில் இந்த ஆண்டு வெளிவந்த ஆலப்புழா ஜிம்கானா படத்தில் நடித்திருந்தார்.
இவர்கள் மட்டுமின்றி விமர்சகர் கோடாங்கியும் இந்த டீசரில் வரும் ஒரு காட்சியில் உள்ளார்.
நடிகை ஸ்வாசிகா இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த டீசரில் வரும் போராட்ட காட்சி ஒன்றில் அவர் இருப்பதாக தெரிகிறது. ஆனால், கதாநாயகி த்ரிஷா டீசரில் இடம்பெறவில்லை.