விஜய் மீது வழக்கு, வருத்தம் கூட தெரிவிக்காதது ஏன்.. கரூர் சம்பவம் பற்றி நீதிபதி காட்டம்
நடிகர் விஜய் கடந்த செப்டம்பர் 27ம் தேதி கரூரில் நடத்திய அரசியல் பிரச்சார கூட்டத்தில் பெரிய கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியானார்கள்.
போலீஸ் பாதுகாப்பில் குறைபாடு இருந்தது, இது தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டும் என தவெக தரப்பு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தது. அந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது.
நீதிபதி காட்டம்
கூட்ட நெரிசல் சம்பவம் நடந்தபிறகு விஜய் மற்றும் அவரது கட்சியினர் அனைவரும் அங்கிருந்து மறைந்துவிட்டனர். அனைவரும் மீட்பு பணியில் இருந்தபோது நிகழ்ச்சி நடத்திய தவெகவினர் வெளியேறிவிட்டனர் என குறிப்பிட்டு நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
”இது எந்த மாதிரியான கட்சி? சம்பவத்திற்கு தவெக வருத்தம் கூட தெரிவிக்கவில்லை. விஜய்க்கு தலைமைத்துவ பண்பே இல்லை" என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் காட்டமாக தெரிவித்து இருக்கிறார்.
மேலும் விஜய் மீது வழக்கு பதிவு செய்யப்படாதது ஏன் என கேள்வி எழுப்பிய நீதிபதி, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என குறிப்பிட்டு வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டு இருக்கிறார்.
அதுமட்டுமின்றி விஜய்யின் பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது பற்றி வழக்கு பதிவு செய்யப்படாதது ஏன் என்றும் நீதிபதி போலீசை கேட்டிருக்கிறார்.