கரூரில் 39 பேர் பலி.. தவெக விஜய் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு..
கரூரில் 39 பேர் பலி
விஜய்யின் பிரச்சாரம் நேற்று நாமக்கல் மற்றும் கரூரில் நடைபெற்றது. இதில் பிற்பகல் நாமக்கல் பரப்புரையை முடித்துவிட்டு, இரவு 7 மணிக்கு கரூருக்கு வந்தடைந்தார். அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி மக்கள் அவதிப்பட்டனர்.
இதில் மருத்துவமனையில் பலரும் அனுமதிக்கப்பட்ட நிலையில், 39 பேர் பலியாகியுள்ளனர். இது மீளாத்துயரத்தை கொடுத்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் கரூர் சென்று தனது அஞ்சலியை செலுத்தினார். மேலும் இன்று காலை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து, உயிரிழந்தவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
நேற்று இரவு இந்த சம்பவம் நடந்த நிலையில், கரூரில் இருந்து சென்னைக்கு வந்தார் விஜய். இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் வேதனையுடன் பதிவை வெளியிட்டு இருந்தாலும், பத்திரிகையாளர்களின் கேள்விக்கு அவர் பதிலளிக்காமல் சென்றது வருத்தத்தை தந்தது என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். பாதிக்கப்பட்டவர்களை அவர் ஏன் நேரில் சென்று பார்க்கவில்லை என்றும் கேள்வி எழுந்துள்ளது.
போலீஸ் பாதுகாப்பு
சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய்யின் வீட்டிற்கு நேற்று இரவில் இருந்தே போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கூடுதலாக ஒரு காவல் ஆய்வாளர் தலைமையில் 15 போலீஸார் பாதுகாப்பு. மேலும், துணை இராணுவ வீரர்கள் 5 பேர் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.