கரூர் துயர சம்பவம்! உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு.. 41 குடும்பங்களை தத்தெடுக்கும் விஜய்..
கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டபோது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் வீடியோகால் மூலம் விஜய் பேசினார். தனக்கு காவல்துறையிடம் இருந்து அனுமதி கிடைத்தபின், அனைவரையும் நேரில் வந்து சந்திப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
உச்ச நீதிமன்றம் - சிபிஐ
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி தொடரப்பட்ட வலக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இன்று அந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.
ஆதவ் அர்ஜுனா
உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின், செய்தியாளர்களை சந்தித்து பேசினார் ஆதவ் அர்ஜுனா. கரூர் துயர சம்பவம் குறித்தும், வழக்கை பற்றியும் பல விஷயங்களை பகிர்ந்துகொண்ட அவர், பாதிக்கப்பட்ட 41 குடும்பங்களை தவெக தலைவர் விஜய் அவர்கள் தத்தெடுக்கப்போவதாக கூறினார். அவர்களுடன் வாழ்நாள் முழுவதும் நாம் பயணிக்கப்போகிறோம் என்றும் விஜய் கூறியதாக ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.