நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் இல்லை! இவர் தான்..: நடிகை கஸ்தூரி
நடிகை நயன்தாரா தற்போது தென்னிந்திய சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக இருந்து வருகிறார். மேலும் அவர் ஹிந்தியிலும் தற்போது ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகம் ஆகி இருக்கிறார்.
நயன்தாரா சென்ற வருடம் வாடகை தாய் மூலமாக இரட்டை குழந்தைகள் பெற்றுக்கொண்டார். அப்போது அது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அப்போது நடிகை கஸ்தூரி நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனை தாக்கி கமெண்ட் செய்து இருந்தார்.
லேடி சூப்பர்ஸ்டார் இல்லை
இந்நிலையில் தற்போது ஒரு நிகழ்ச்சியில் பேசிய கஸ்தூரி நயன்தாராவை லேடி சூப்பர்ஸ்டார் என்று சொல்ல முடியாது என கூறி இருக்கிறார்.
கே.பி.சுந்தராம்பாள், விஜயசாந்தி போன்றவர்கள் தான் நிஜமான லேடி சூப்பர்ஸ்டார் என அவர் கூறி இருக்கிறாராம். வழக்கம்போல கஸ்தூரியின் பேச்சு சர்ச்சையாகி ட்விட்டரில் அவருடன் நெட்டிசன்கள் பலரும் வாக்குவாதம் செய்ய தொடங்கி இருக்கின்றனர்.
பிக் பாஸ் வீட்டுக்கு வரும் கயல் சீரியல் நடிகை.. யார் பாருங்க

குழந்தையின் டயப்பர், சிந்திய சிறுநீர் பை; விமானத்தில் அருவருப்பு விஷயம் - பணிப்பெண் ஆதங்கம் IBC Tamilnadu

இன்னும் 25 நாட்களில் ஆரம்பமாகும் சனிப்பெயர்ச்சி: புதிய வாழ்க்கையை ஆரம்பிக்கபோகும் 5 ராசிகள் Manithan
