தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து.. எனக்கு சம்மந்தமில்லை என்று கூறிய தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா
தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து
தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்து செய்துகொள்ள போவதாக சில மாதங்களுக்கு முன் அறிவித்திருந்தனர். இந்த அறிவிப்பு பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.
விரைவில் மீண்டும் இருவரும் இணைந்து விடுவார்கள் என்று பலரும் எண்ணினார்கள். ஆனால், அது நடக்கவில்லை.

விவாகரத்துக்கு பின் தங்களுடைய மகனுக்காக மட்டும் இருவரும் ஒரே இடத்தில் சந்தித்து கொண்டனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் கூட வெளிவந்தது.
கஸ்தூரி ராஜா பதில்
இந்நிலையில், தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து குறித்து தனுஷின் தந்தையும் பிரபல இயக்குனருமான கஸ்தூரி ராஜாவிடம் பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி கேட்டார்.
இதற்க்கு, இது சம்மந்தம் இல்லாதா கேள்வி. இதனால் தான் நான் மீடியாவை சந்திப்பது இல்லை. அத்துமீறி கேள்வி கேட்கிறீர்கள் என்று பேசியுள்ளார்.

கஸ்தூரி ராஜா இப்படி கூறியது தற்போது ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
கனடாவிலிருந்து பிரிய விரும்பும் மாகாணமொன்றின் மக்கள்: அமெரிக்க அதிகாரிகளை சந்தித்ததால் பரபரப்பு News Lankasri