பிக் பாஸ் வர முடியாது.. இந்த fake show TV பின்னால் ஓட முடியாது! கடுமையாக விமர்சித்த கஸ்தூரி
இதற்கு முன் நடந்து முடிந்த பிக் பாஸ் ஷோக்களில் அதிகம் சர்ச்சைகளை ஏற்படுத்திய போட்டியாளர்களை தேர்வு செய்து பிக் பாஸ் அல்டிமேட் ஷோவுக்குள் கொண்டுவந்திருக்கின்றனர். இதில் ஓவியாவும் போட்டியாளராக வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் அவர் வரவில்லை.
இந்நிலையில் நடிகை கஸ்தூரியை வைல்டு கார்டு எண்ட்ரியாக வரும்படி நெட்டிசன் ஒருவர் அழைக்க அவர் கோபமாக அதற்கு பதில் அளித்து இருக்கிறார்.
"எனக்கு குடும்ப இருக்கு, வேலை இருக்கிறது. இந்த toxic ஷோவுக்கு வர நேரம் இல்லை. குறிப்பாக இந்த fake ஷோ டிவி பின்னால் paymentக்காக ஓட முடியாது. உங்கள் எதிர்பார்ப்பை வேறு எங்காவது கொண்டு செல்லுங்கள்" என கஸ்தூரி கூறி இருக்கிறார்.
Well, I have a family and fulfilling work to attend to. No time for toxicity then or now. And certainly no time to run behind fake show TVs for payment. You need to take your twisted expectations elsewhere.#BiggBossUltimate https://t.co/IyJdKMCUNE
— Kasturi Shankar (@KasthuriShankar) January 31, 2022