விக்ரமின் மகான் படத்தை கடுமையாக விமர்சித்த பிரபல நடிகை !
கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் விக்ரம் தனது மகன் துருவ் விக்ரம் உடன் இணைந்து நடித்த திரைப்படம் மகான்.
சமீபத்தில் அமேசான் பிரைமில் நேரடியாக வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது, அதுமட்டுமின்றி கலவையான விமர்சங்களையும் இப்படம் சந்தித்தது.
இப்படத்தில் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இருவரின் நடிப்பும் அனைவரும் கவர்ந்தது என்றே கூறலாம்.
இந்நிலையில் தற்போது பிரபல நடிகையான கஸ்தூரி மகான் திரைப்படம் குறித்து விமர்சிக்கும் வகையில் அவரின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் "அப்பா, மகன் இணைந்து நடித்தால் ஓடாது என்பதற்கு மகான் படமும் ஒரு உதாரணம் ஆகிவிட்டது. அப்பா, மகன் இணைந்து நடித்து ஹிட்டான திரைப்படங்களை சொல்லுங்கள்" என மகான் படத்தை விமர்சிக்கும் வகையில் பதிவிட்டுள்ளார்.
சூரியன் - குரு சேர்க்கையால் உருவாகும் குரு ஆதித்ய ராஜயோகம்: உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் யார்? Manithan
செவ்வாய் மீது சனியின் மூன்றாம் பார்வை... அதிர்ஷ்டத்தினை அள்ளிச் செல்லும் ராசியினர் யார்னு தெரியுமா? Manithan