வீட்டை விட்டு வெளியேறிய கதிர் - முல்லை! பாண்டியன் ஸ்டோர்ஸ் அதிர்ச்சி ப்ரோமோ
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது வெளியாகி இருக்கும் அடுத்த வார ப்ரோமோ ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து இருக்கிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
விஜய் டிவியின் டாப் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த கூட்டு குடும்ப கதை மளிகை கடை நடத்தும் அண்ணன் தம்பிகள் மற்றும் அவர்களது மனைவிகள் ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து வரும் நிலையில் சந்திக்கும் பிரச்சனைகள் தான் கதையாக இருக்கும்.
தற்போது கதிரின் மனைவி முல்லைக்கு குழந்தை இல்லை என்பதற்க்காக சிகிச்சை செய்ய வெளியில் கடன் வாங்குகின்றனர். தற்போது கடன் கொடுத்தவர் பணத்தை கேட்டு வீட்டின் முன் வந்து சத்தம் போட்டுவிட்டு போவதால் வீட்டில் பிரச்சனை நடக்கிறது.
வெளியேறும் கதிர் முல்லை
அப்போது மீனா பணம் கொடுக்க முன் வர அவரது அப்பா வந்து அவள் ஏன் பணம் கொடுக்க வேண்டும் என தடுக்கிறார். தனம் தனது வளையலை கொடுக்கிறார், ஆனால் அவளது அம்மா தடுக்கிறார். இப்படி வீட்டில் பல பிரச்சனைகள் நடக்கிறது.
அப்போது 'முல்லைக்கு செலவு செய்த பணத்தை நான் கொடுத்துவிடுகிறேன், அதற்கு நேரம் கொடுங்கள், நாங்கள் போய்விடுகிறோம்' என கூறி வீட்டை விட்டு கிளம்புகிறார்