4 பேரிடம் சிக்கிக்கொண்ட ராஜி, கதிர் காப்பாற்றினாரா? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு ப்ரோமோ
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2ல் குடும்பத்தினர் பேச்சை கேட்காமல் ராஜி மட்டும் தனியாக டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக சென்னைக்கு செல்கிறார்.
அவர் தனியாக வந்திருப்பதை பயன்படுத்தி அவரிடம் தவறாக நடக்கிறார்கள். அதை பற்றி கதிரிடம் ராஜி சொல்லாமல் மறைகிறார். எப்படியாவது ஆடிஷனில் தேர்வாக வேண்டும் என நினைக்கிறார்.
காப்பாற்றிய கதிர்
ராஜி பெட்டியுடன் வீட்டுக்கு கிளம்பிய போது அந்த டான்ஸ் நிகழ்ச்சியை நடத்துபவர்கள் நான்கு பேர் வந்து அவரை தடுத்து ஹோட்டல் அறையில் அடைத்து வைத்து தவறாக நடக்கிறார்கள்.
அப்போது கதிர் வந்து சரியான நேரத்தில் கதவை உடைத்து ராஜியை காப்பாற்றி விடுகிறார். தவறாக நடந்தவனையும் அடித்து உதைக்கிறார்.
அதன்பிறகு காரில் வீட்டுக்கு செல்லும்போது தனக்கு ராஜியை பிடிக்கும் அதனால் தான் இதை செய்வதாக ராஜியிடம் தனது காதலை கூறுகிறார் கதிர். ப்ரொமோ இதோ.