19 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழ் திரையுலகிற்கு வரும் 'இதயம்' பட இயக்குனர்.. ரசிகர்கள் எதிர்பார்ப்பு

kathir murali idhaiyam
By Kathick Aug 14, 2021 01:30 PM GMT
Report

முரளி நடிப்பில் கடந்த 1991-ம் ஆண்டு வெளியான ‘இதயம்’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கதிர்.

இதையடுத்து ‘காதலர் தினம்’, ‘காதல் தேசம்’ போன்ற படங்களை இயக்கினார். இப்படங்கள் தற்போது வரை ரசிகர்களால் மறக்கமுடியாத படமாக அமைந்துள்ளது.

தமிழில் இவர் கடைசியாக இயக்கிய படம் காதல் வைரஸ். 2002 ஆம் ஆண்டு வெளியான இப்படம் தோல்வியை தழுவியது. இதையடுத்து அவர் படங்களை இயக்கவில்லை.

இந்நிலையில், தற்போது மீண்டும் தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்க தயாராகியுள்ளார் இயக்குனர் கதிர். அவர் இயக்கும் புதிய படத்தில் புதுமுக நாயகன் கிஷோர் நடிக்க உள்ளார்.

ஆர்.கே.இண்டர்நேஷனல் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. தற்போது இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

இயக்குனர் கதிர் மீண்டும் தமிழ் திரையுலகிற்கு வருவதால், ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US