ரசிகர்களை சர்ப்ரைஸ் செய்த 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படக்குழு, 3 First look-ஆ!
தமிழ் சினிமாவில் ஆரம்பக்கால கட்டங்களில் சிறு வேடங்களில் நடிக்க தொடங்கி பின் ஹீரோவாக கால்பதித்து இன்று முன்னனி நடிகராக உயர்ந்திருப்பவர் மக்கள்செல்வன் விஜய் சேதுபதி.
இவர் நடிப்பில் சமீபத்தில் முகிழ் என்ற திரைப்படம் வெளியாகியிருந்து எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா சமந்தாவுடன் சேர்ந்து காதுவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார் சேதுபதி.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த படம் குறித்த அப்டேட்டிற்காக ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருந்த நிலையில் இன்று படத்தின் first look வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.
மேலும் காலை விஜய் சேதுபதி மட்டும் இடம்பெற்றுள்ள பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியகையிருந்தது, பின் ரசிகர்கள் மூவரையும் ஒன்றாக இருக்கும் போஸ்ட்டரை எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்தனர்.
இதனிடையே மதியம் சமந்தா லுக்கின் போஸ்டரை வெளியிட்டது படக்குழு, அதில் சமந்தாவின் Khatija எனவும் அறிவித்து இருந்தனர்.
மேலும் நயன்தாராவின் போஸ்டர் இன்று மாலை வெளியாகவும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

