42 வயதாகும் நடிகை கத்ரீனா கைஃப்பின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா, இதோ
கத்ரீனா கைஃப்
பாலிவுட் திரையுலகில் டாப் நாயகிகளில் ஒருவர் கத்ரீனா கைஃப். அமிதாப் பச்சன் நடிப்பில் வெளிவந்த பூம் படத்தின் மூலம் நடிகையாக ஹிந்தியில் அறிமுகமானார்.
தொடர்ந்து ரேஸ், சிங் இஸ் கிங், Ek Tha Tiger, தூம் 3, Thugs of Hindostan, டைகர் 3 என பல படங்களில் நடித்து வந்தார். 23 ஆண்டுகளை சினிமாவில் கடந்திருக்கும் கத்ரீனா கைஃப் இன்றும் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹிந்தியில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவரான விக்கி கவுஷால் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்கள் திருமணம் கடந்த 2021ம் ஆண்டு மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
42வது பிறந்தநாள்
ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக வலம் வரும் கத்ரீனா கைஃப்பின் 42வது பிறந்தநாள் இன்று. அவருக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
சொத்து மதிப்பு
இந்த நிலையில், 42 வயதை எட்டியுள்ள நடிகை கத்ரீனா கைஃப்பின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ. 240 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.
பாலிவுட்டில் டாப் 10 பணக்கார நடிகைகளில் இவரும் ஒருவர் ஆவார். மேலும் இவர் ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்காக ரூ. 15 கோடி முதல் ரூ. 20 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

மீண்டும் திமுகதான்.. மேலே வந்த விஜயின் தவெக - அப்போ அதிமுகவின் நிலை? (தேர்தல் கருத்து கணிப்பு) IBC Tamilnadu

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan
