விஜய் பெரிய சூப்பர்ஸ்டார்.. விளம்பர ஷூட்டிங்கில் எப்படி நடந்துகொண்டார் தெரியுமா: கத்ரீனா கைப் நெகிழ்ச்சி
நடிகர் விஜய் தென்னிந்திய சினிமாவில் டாப் ஹீரோ. அவருக்கு மற்ற நடிகர்களே கூட பலரும் ரசிகர்களும் இருக்கிறார்கள்.
விஜய் உடன் ஒரு விளம்பர வீடியோவில் நடித்த ஹிந்தி நடிகை கத்ரீனா கைப் அளித்திருக்கும் ஒரு பேட்டியில் விஜய் ஒரு சூப்பர்ஸ்டார், ஆனால் மிக எளிமையாக நடந்துகொண்டார் என கூறி இருக்கிறார்.

ஊட்டியில் அந்த ad ஷூட்டிங் நடந்தது. அப்போது கத்ரீனா அமர்ந்து போனை பார்த்துக்கொண்டிருந்தாராம், எதிரில் இரண்டு ஷூ கால்கள் இருப்பதை பார்த்தாராம், கொஞ்ச நேரம் கழித்து பார்த்தாலும் அந்த கால்களே அங்கே தான் நின்றுகொண்டிருந்தது.
நான் மேலே பார்க்காமல் அமர்ந்து போனை பார்த்துக்கொண்டிருந்தேன். அதன் பின் மேலே தலையை தூக்கி பார்க்கும்போது தான் அது விஜய் என தெரிந்தது. அவர் எனக்கு bye சொல்வதற்காக வந்து, என்னை டிஸ்டர்ப் செய்ய வேண்டாம் என நின்று இருக்கிறார். அவ்வளவு எளிமையானவர், shy type என கத்ரீன் கூறி இருக்கிறார்.
"#Vijay is a HUGEEEEEE star...he is a south superstar...he was so polite, he was very sweet."
— George (@VijayIsMyLife) July 16, 2022
Bollywood actress #KatrinaKaif was bowled over by a perfect gentleman #ThalapathyVijay! #HappyBirthdayKatrinaKaif #HBDKatrinaKaif @actorvijay pic.twitter.com/bp2V8JpooP