கத்ரினா கைப் திருமண பத்திரிக்கை இதோ: விருந்தினர்களுக்கு போடப்பட்ட முக்கிய கண்டிஷன்
பாலிவுட் நடிகை கத்ரீனா கைப் திருமணம் மிக பிரமாண்டமாக ராஜஸ்தானின் Fort Barwara என்ற இடத்தில் நடைபெற இருக்கிறது. மிகவும் பிரம்மாண்டமாக நடக்கும் இந்த விழாவுக்கு நட்சத்திரங்கள் பலர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் சல்மான் கான், ஆலியா பட் உள்ளிட்டோருக்கு கத்ரீனா அழைப்பு கொடுக்கவில்லை என தகவல் வெளியாகி இருக்கிறது.
தற்போது கத்ரீனா - விக்கி கௌஷல் திருமண விழாவின் பத்திரிகை இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. அது மட்டுமின்றி திருமணத்திற்கு வரும் விருந்தினர்களுக்கு சில கண்டிஷன்களும் போடப்பட்டு இருக்கிறது.
கண்டிஷன் என்னவென்றால் யாரும் திருமண விழாவுக்கு செல்போன் எடுத்து கொண்டு வர கூடாது, போட்டோ - வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் போட கூடாது. அதனால் செல்போனை ஹோட்டல் அறையிலேயே வைத்துவிட்டு வந்துவிடுங்கள் என விருந்தினர்கள் எல்லோருக்கும் அவர்கள் அறிவுறுத்தி இருக்கின்றனர்.
அந்த போட்டோவும் தற்போது இணையத்தில் வைரல் ஆகிறது.
#katrinakaifwedding #katrinakishaadi #katrinavicky #vickatwedding pic.twitter.com/C7teWglDZc
— KatrinaKaif.Fc.Bangldesh (@katrina_fc_bd) December 7, 2021