நடிகை கத்ரீனா கைஃப், விக்கி கவுசல் திருமணம்.. அதுவும் இத்தனை கட்டுப்பாடுகளுடன்..
பாலிவுட் திரை நட்சத்திரங்களான நடிகை கத்ரீனா கைஃப் மற்றும் நடிகர் விக்கி கவுசல் இருவரும் திருமணம் செய்யவுள்ளனர்.
தன்னைவிட 5 வயது குறைந்த நபரை நடிகை கத்ரீனா திருமணம் செய்யவுள்ளார். இந்த திருமணம் வரும் டிசம்பர் 9ம் தேதி ராஜஸ்தானில் நடைபெறவுள்ளது.
தனியார் ரிசார்ட் ஒன்றில் அவர்களது திருமணம் மூன்று நாள் கொண்டாட்டமாக நடைபெற உள்ளது.
இவர்களது திருமணத்திற்கு மிகவும் நெருக்கமான நண்பர்கள், உறவினர்கள் மட்டுமே கலந்து கொள்ளவுள்ளார்களாம்.
திருமணம் நடைபெற உள் இடத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்திற்குப் பிறகு Mobile phone-ஸ் எடுத்து வர அனுமதி இல்லையாம்.
அதே போல், திருமண நிகழ்வுகள் பற்றி எந்த ஒரு பதிவையும், நிகழ்வில் கலந்து கொள்பவர்கள், சமூக வலைத்தளங்களில் கத்ரினா, விக்கி ஆகியோரின் அனுமதி இல்லாமல் பதிவிடக் கூடாதாம்.
இத்தனை கட்டுப்பாடுகளுடன் தான் இந்த திருமணம் நடைபெற்றவுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.