நீயா நானா விவகாரம்: ட்ரோலுக்கு உள்ளான மனைவிக்கு ஆதரவாக பேசிய பிரபலம்
நேற்று நீயா நானா ஷோவில் 'அதிகம் சம்பாதிக்கும் பெண்கள் vs அவர்களது கணவர்கள்' என்கிற தலைப்பில் வாக்குவாதம் நடந்தது.
நீயா நானா
அப்போது எல்லோர் முன்னிலையில் கணவருக்கு படிக்க தெரியாது, குழந்தையின் progress ரிப்போர்ட் கொடுத்தால் கூட அதை 1 மணி நேரம் பார்த்துக்கொண்டிருப்பார், எழுத்துக்கூட்டி ABCD படித்துக்கொண்டிருப்பார் என ஏளனமாக மனைவி பேசினார்.
அதை கேட்டு கோபமான கோபிநாத் அந்த தந்தையை பாராட்டி உடனே பரிசு கொடுத்தார். தற்போது நெட்டிசன்கள் அந்த தந்தையை பாராட்டியும், மனைவியை விளாசியும் வருகிறார்கள்.
படித்த திமிரில் மனைவி எல்லோர் முன்னிலையில் கணவர் படிக்கவில்லை என ஏளனம் செய்கிறார் என நெட்டிசன்கள் பேசி வருகின்றனர்.
மனைவிக்கு ஆதரவாக பேசிய பாடலாசிரியர் தாமரை
இந்நிலையில் தற்போது கடும் ட்ரோல்களை சந்தித்து வரும் அந்த மனைவிக்கு ஆதரவாக பாடலாசிரியர் தாமரை பேசி இருக்கிறார். எப்படி பேச வேண்டும் என தெரியாமல் அவர் பேசிவிட்டார், மனைவி கண்டிப்புடன் இல்லை என்றால் குடும்பம் முன்னேறாது என அவர் கூறி இருக்கிறார்.