சிம்புவின் அரசன் படம் தரமாக இருக்கும் ஆனால்.. நடிகர் கவின் உடைத்த ரகசியம்!
அரசன்
சிம்பு நடிப்பில் அடுத்ததாக உருவாகி வரும் திரைப்படம் அரசன். வெற்றிமாறன் இயக்கத்தில் முதல் முறையாக இப்படத்தில் சிம்பு நடிக்கவுள்ளார். இப்படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கிறார்.
வடசென்னை உலகில் இப்படத்தின் கதை அமைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதனாலேயே இப்படத்தின் மீது அதீத எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்துள்ளனர். இப்படத்திற்கு அரசன் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

ரகசியம்!
இந்நிலையில், இப்படம் குறித்து கவின் சில அதிரடி விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
அதில், " அரசன் படத்தை பற்றி எனக்கு அனைத்தும் தெரியும். இந்த படத்தின் கதை தரமாக இருக்கும். ஆனால் அதை நான் வெளியே சொல்ல மாட்டேன்.
இந்த படம் சிலம்பரசன், வெற்றிமாறன், மற்றும் அனிருத் ஆகியோரின் ரசிகர்களை முழுமையாக திருப்திப்படுத்தும் வகையில் இருக்கும். இவர்கள் மூன்று பேரும் இணைந்து ஒரே படத்தில் பணியாற்றுவது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
