கவினின் அடுத்த படம் 'ஸ்டார்'.. வைரலாகும் போஸ்டர் இதோ
கவின்
நடிகர் கவினின் அடுத்த படம் படம் பற்றிய அறிவிப்பு வந்திருக்கிறது. இது பற்றிய ஹிண்ட் நேற்றே அவர்கள் கொடுத்திருந்த நிலையில் தற்போது படத்தின் போஸ்டர் மற்றும் டைட்டில் வெளியாகி இருக்கிறது.
பியார் பிரேமா காதல் பட இயக்குனர் இலன் இயக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க இருக்கிறார்.
ஸ்டார்
இந்த படத்திற்கு ஸ்டார் என பெயரிடப்பட்டு இருப்பதால் கவின் அந்த படத்தில் நடிகர் ரோலில் தான் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
"வயது முதிர்ந்த போதிலும்.. வலிகள் மிகுந்த போதிலும்.. வலிமை குறைந்த போதிலும்.. வீரன் வாள் தரிப்பதை நிறுத்துவதில்லை!" என குறிப்பிட்டு இந்த போஸ்ட்டரை வெளியிட்டு இருக்கும் கவின் வரும் ஆகஸ்ட் 31ம் தேதி வெளியாகும் என தெரிவித்து இருக்கிறார்.
வயது முதிர்ந்த போதிலும்..
— Kavin (@Kavin_m_0431) August 28, 2023
வலிகள் மிகுந்த போதிலும்..
வலிமை குறைந்த போதிலும்..
வீரன் வாள் தரிப்பதை நிறுத்துவதில்லை!#Star
Special promo on Aug 31st ⭐️ pic.twitter.com/ei4SWbOFgz