டாடா படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது இவர் தான்.. கவின் கிடையாது..!
டாடா
கணேஷ் கே. பாபுவின் அறிமுக இயக்கத்தில் கவின் நடிப்பில் உருவாகி வெளிவந்த திரைப்படம் டாடா. கடந்த வருடம் வெளிவந்த இப்படமா மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.
இப்படத்தில் கவினுடன் இணைந்து அபர்ணா தாஸ், விடிவி கணேஷ், ஹரிஷ் குமார், பிரதீப் ஆண்டனி என பலரும் நடித்திருந்தனர்.
இப்படம் உலகளவில் ரூ. 12 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. டாடா வெற்றியை தொடர்ந்து தான் கவினுக்கு பல திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்துள்ளது.
முதல் ஹீரோ இவர் தான்
இந்நிலையில், மாபெரும் வெற்றியடைந்த டாடா படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது கவின் கிடையாதாம். இந்த கதையில் முதன் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது பிரதீப் ஆண்டனி தானாம்.
தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலக்கி வரும் பிரதீப் ஆண்டனி தான் டாடா படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்துள்ளார். ஆனால், கதை கேட்டு முடித்தவுடன், இந்த படம் கவினுக்கு தான் சரியாக இருக்கும், அவனை வைத்து இந்த படத்தை எடுங்க என்று இயக்குனரிடம் கூறினாராம் பிரதீப்.
ஹீரோ ரோலுக்கு பதிலாக படத்தில் இருக்கும் வேறொரு கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் என்றும் கூறியிருக்கிறார். இந்த தகவலை பிரதீப்பின் நண்பர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.