பிக் பாஸ் கவினுக்கு ஜோடியான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை.. அதுவும் யாருடைய தயாரிப்பில் தெரியுமா

serial bigg boss kavin pandian stores arivumani
By Kathick Oct 22, 2021 10:20 AM GMT
Report

பிக் பாஸ் மூலம் பிரபலமான நடிகர் கவின் சமீபத்தில் லிப்ட் படத்தில் நடித்திருந்தார்.

இதனையடுத்து தற்போது ஒரு வெப் சீரிஸில் நடித்து வரும் கவின், அடுத்ததாக நயன்தாராவின் படத்தில் நடிக்கவுள்ளாராம்.

ரவுடி பிக்சர்ஸ் சார்பில் நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து திரைப்படங்களை தயாரித்து வருகிறார்.

மேலும் தற்போது நயன்தாரா - விக்னேஷ் சிவன் இணைந்து தயாரிக்கும் ஊர்குருவி எனும் புதிய படத்தில், கவின் ஹீரோவாக நடிக்க உள்ளார். இதன் அறிவிப்பும் சமீபத்தில் வெளியானது.

இந்நிலையில், இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக நடிக்க காவ்யா அறிவுமணி ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை காவ்யா அறிவுமணி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

மேலும் இப்படத்தில் நடிப்பதற்காக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை விட்டு காவ்யா அறிவுமணி விலகியுள்ளதாக தகவல் வெளியாகின.

பொறுத்திருந்து பார்ப்போம் இதனுடைய அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US