ஷூட்டிங் லேட்டாக வருகிறேனா.. சர்ச்சைக்கு மேடையில் பதிலடி கொடுத்த கவின்
நடிகர் கவின் சின்னத்திரையில் பிரபலம் ஆகி அதன்பிறகு சினிமாவில் ஹீரோவாக வளர்ந்தவர். அவர் கடந்த வருடம் நடித்த டாடா என்ற படம் பெரிய ஹிட் ஆனது. அதில் ஒரு குழந்தைக்கு அப்பாவாக கவின் நடித்து இருப்பார். தியேட்டர் மட்டுமின்றி ஒடிடியிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
அதன் பிறகு கவின் தற்போது கைவசம் சில படங்கள் வைத்து இருக்கிறார். அவர் நடித்த ஸ்டார் படம் வரும் ஏப்ரல் 12ம் தேதி ரிலீஸ் ஆகிறது.
இந்நிலையில் கவின் சமீப காலமாக படப்பிடிப்புக்கு நேரத்திற்கு வருவதில்லை, வந்தாலும் கேரவனில் ரொம்ப நேரம் இருக்கிறார், அப்படி ஹீரோக்கள் லேட் ஆக வருவதால் தயாரிப்பாளருக்கு தான் பெரிய நஷ்டம் ஏற்படுகிறது என ஒரு பிரபல தயாரிப்பாளர் புகார் கூறியதாக சர்ச்சை வெடித்தது.
ஒரு படம் ஹிட் ஆனதும் கவின் இப்படி சிம்பு போல மாறிட்டாரே என நெட்டிசன்களும் அவரை ட்ரோல் செய்தனர்.
சர்ச்சைக்கு கவின் பதிலடி
ஒரு கல்லூரி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் கவின் சர்ச்சைக்கு பதிலடி கொடுத்து இருக்கிறார். 'நான் லேட்டாக வந்துட்டேனா? என்னிடம் 7 மணி என கூறினார்கள், நான் ஆறு மணிக்கே ரெடி ஆகிவிட்டேன். ஆனால் 6.45 க்கு தான் என்னை அழைக்க வந்தார்கள்' என மேடையில் கவின் பேசி இருக்கிறார்.
தன்னை பற்றிய சர்ச்சைக்கு இப்படி கவின் பதிலடி கொடுத்து இருக்கிறார். அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.
#Kavin's reply to the today's controversy 😀pic.twitter.com/ftUzHkw5PE
— AmuthaBharathi (@CinemaWithAB) March 9, 2024